“பாஜக தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்” : அமைச்சர் செல்லூர் ராஜூ பகீர் பேட்டி!

“பாஜக தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்” : அமைச்சர் செல்லூர் ராஜூ பகீர் பேட்டி!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என முடிவானதையடுத்து சட்டமன்ற தேர்தல் பணிகளை அக்கட்சி தொடங்கியுள்ளனர்.

“பாஜக தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்” : அமைச்சர் செல்லூர் ராஜூ பகீர் பேட்டி!

அதிமுகவின் தேர்தல் பிரச்சார தொடக்க பணி நாளை சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு ஓபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும் தலைமை ஏற்கின்றனர். இந்த சூழலில் முதல்வர் வேட்பாளரை பாஜக தான் அறிவிக்கும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் எல். முருகன் தெரிவித்தார் . ஆனால் முதல்வர் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் கட்சி மட்டும் தான் எங்கள் கூட்டணியில் இருக்கும் என்று அமைச்சர்கள் கூறி வந்தனர். இதனால் அதிமுக – பாஜக கூட்டணி இடையே சலசலப்பு நீட்டித்து வந்தது.

“பாஜக தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்” : அமைச்சர் செல்லூர் ராஜூ பகீர் பேட்டி!

இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை பழங்காநத்தம் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பாஜக அகில இந்திய கட்சி என்பதால் அவர்களின் கொள்கை படி அகில இந்திய கட்சி தலைவர் தான் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார். கூட்டணியில் மாநில கட்சிகள் மட்டும் இருந்தால் மாநில கட்சிகள் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கலாம். ஆனால் மாநில கட்சியுடன் அகில இந்திய கட்சி கூட்டணியில் இருக்கும் நிலையில் அவர்கள் தான் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பர் “என்றார்.