புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு முன்பு டி.வி-க்களை கொண்டு சேர்த்த பா.ஜ.க! – எதிர்க்கட்சிகள் கண்டனம்

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கொரோனா ஒழிப்பு பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பாரதிய ஜனதா அடுத்து நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் பொதுக்கூட்டம், பேரணி நடத்த முடியாத நிலையில் கிராமங்கள் தோறும் தொலைக்காட்சி பெட்டியை வைத்து நூதன பிரசாரத்தில் பாஜக இறங்கியுள்ளது.
பீகார் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார காணொலி காட்சிக் கூட்டத்தில் அமித்ஷா பேசினார். இதை 43 லட்சம் மக்கள் பார்த்ததாக மாநில பா.ஜ.க தலைவர் தெரிவித்துள்ளார். இதற்காக 70 ஆயிரம் எல்.இ.டி டி.வி-க்கள் வாங்கி கிராமங்கள் தோறும் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

http://


இதே போன்று மேற்கு வங்கத்திலும் டி.வி வாங்கி வைத்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர் பா.ஜ.க-வினர். மேற்கு வங்கத்தில் மூங்கில்களுக்கு நடுவே தொலைக்காட்சி பெட்டி வைத்து அமித்ஷா பேச்சு ஒளிபரப்பப்பட்ட புகைப்படம் ஒன்றை அக்கட்சியைச் சேர்ந்தவர் பெருமையுடன் வெளியிட்டுள்ளார். அதை சிறுவர்கள் சிலர் ஆர்வமுடன் பார்க்கின்றனர். பெரியவர்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதற்கு சமூக ஊடகங்களில் பலரும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

http://


புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்க முடியவில்லை. ஏழைகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.7500 போட முடியவில்லை. ஆனால், தேர்தல் பிரசாரத்துக்காக 70 ஆயிரம் ஃபிளாட் ஸ்கிரீன் டி.வி-க்களும், 15 ஆயிரம் பிரம்மாண்ட எல்.இ.டி டிவியும் வாங்க மட்டும் பா.ஜ.க-வுக்கு பணம் இருக்கிறது.

http://


இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, “புலம்பெயர் தொழிலாளர்கள் இன்னும் தங்கள் வீடுகளுக்குப் போய் சேரவில;ல. ஆனால் அதற்கு முன்னதாகவே பா.ஜ.க தொலைக்காட்சிகள் கிராமங்களுக்கு போய்ச் சேர்ந்துவிட்டன” என்று கூறியுள்ளது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் பா.ஜ.க-வின் பிரசார வெறிக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

Most Popular

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுதியிருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாஸ்குமார்(19), கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையம் செம்பாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த...

கேரளாவில் இன்று 1,298 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில்...

இ-பாஸ் நடைமுறை எதற்கு?- முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்று சென்னையில் சற்று குறைந்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்ததால் லட்சக்கணக்கானோர் சொந்த...

பாஜகவுக்கு தாவுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்?

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களாக பார்த்து பாஜக வலை விரிக்கிறது என்று பேசப்பட்டு வரும் சூழலில் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற வி.பி.துரைசாமி, கு.க.செல்வம்...