முதலாமாண்டு விழா… ஜோதிமணியை ஆபாசமாக விமர்சித்தவர் தலைமையில் குழு அமைத்த தமிழக பா.ஜ.க!

 

முதலாமாண்டு விழா… ஜோதிமணியை ஆபாசமாக விமர்சித்தவர் தலைமையில் குழு அமைத்த தமிழக பா.ஜ.க!

பிரதமர் மோடி பதவி ஏற்றதன் முதலாமாண்டு விழாவைக் கொண்டாட ஜோதிமணி எம்.பி-யை ஆபாசமாக விமர்சித்த கரு.நகாராஜன் தலைமையில் குழு ஒன்றை தமிழக பா.ஜ.க அமைத்துள்ளது.
தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை மிக ஆபாசமாக விமர்சித்தவர் பா.ஜ.க மாநில செயலாளர் கரு.நாகராஜன்.

முதலாமாண்டு விழா… ஜோதிமணியை ஆபாசமாக விமர்சித்தவர் தலைமையில் குழு அமைத்த தமிழக பா.ஜ.க!
தற்போது பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததன் முதலாமாண்டு விழாவைக் கொண்டாட தமிழக பா.ஜ.க திட்டமிட்டு வருகிறது. மிகப்பெரிய அளவில் கொண்டாடும் வகையில் சிறப்பு குழுக்களை எல்லாம் தமிழக பா.ஜ.க அமைத்துள்ளது. தமிழகம் முழுக்க மாவட்ட, மண்டல, கிளை அளவில் விழாக்கள் நடப்பதை உறுதி செய்ய குழு ஒன்றை அமைத்துள்ளார் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன். இந்த குழுவின் தலைவர்களாக மாநில பொதுச் செயலாளர் நரேந்திரன் மற்றும் மாநிலச் செயலாளர் கரு.நாகராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வரும் நிலையில் தமிழக பா.ஜ.க கொண்டாட்டத்தில் இறங்கியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.