பாஜகவின் வேல் யாத்திரை இன்று நிறைவு: ம.பி முதல்வர் பங்கேற்கிறார்!

 

பாஜகவின் வேல் யாத்திரை இன்று நிறைவு: ம.பி முதல்வர் பங்கேற்கிறார்!

அரசின் தடையை மீறி கடந்த மாதம் பாஜக தொடங்கிய வேல்யாத்திரை இன்று திருச்செந்தூரில் நிறைவு பெறுகிறது.

தமிழக பாஜக சார்பில் கடந்த மாதம் 6ம் தேதி வேல் யாத்திரை தொடங்கியது. கொரோனவை காரணம் காட்டி அரசு இதற்கு தடை விதித்திருந்தும் அதனை மீறி, யாத்திரை நடத்தியதால் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. தடை விதித்தாலும் அறுபடை வீடு உள்ளிட்ட ஊர்களில் யாத்திரையை தொடருவோம் என எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

பாஜகவின் வேல் யாத்திரை இன்று நிறைவு: ம.பி முதல்வர் பங்கேற்கிறார்!

அதன் படியே, எல்.முருகன் தலைமையில் முருகனின் அறுபடை வீடுகளை நோக்கி வேல் யாத்திரை நடந்தது. நேற்றும் தடையை மீறி வேல் யாத்திரை நடத்தியதால் எல்.முருகன், ஹெச்.ராஜா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், பாஜகவின் வேல் யாத்திரை இன்று திருச்செந்தூரில் நிறைவு பெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்காக, வேல் யாத்திரையில் வைக்கப்பட்டிருந்த 3 அடி ஐம்பொன் வேலை எல்.முருகன் திருச்செந்தூர் கோயிலுக்கு காணிக்கையாக செலுத்தியிருக்கிறார்.

பாஜகவின் வேல் யாத்திரை இன்று நிறைவு: ம.பி முதல்வர் பங்கேற்கிறார்!

இந்த நிகழ்ச்சியில், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்கவிருக்கிறார். கொரோனா விதிகளுக்கு உட்பட்டு வேல் யாத்திரை நிறைவு பெறும் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், ம.பி முதல்வர் பங்கேற்க உள்ள பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.