ஓடியாடி, விளையாடி வாக்கு சேகரித்த வானதி… களைகட்டும் கோவை தெற்கு!!

ஓடியாடி, விளையாடி  வாக்கு சேகரித்த வானதி… களைகட்டும் கோவை தெற்கு!!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் இடம்பெற்றுள்ள நிலையில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஓடியாடி, விளையாடி  வாக்கு சேகரித்த வானதி… களைகட்டும் கோவை தெற்கு!!

திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம்விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி, கோயம்புத்தூர் தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம், மதுரை வடக்கு ஆகிய 20 இடங்களிலும் பாஜக போட்டியிடவுள்ளது.

ஓடியாடி, விளையாடி  வாக்கு சேகரித்த வானதி… களைகட்டும் கோவை தெற்கு!!

குறிப்பாக கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் களமிறங்கியுள்ளார். அவருக்கு எதிராக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசனும், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக மயூரா எஸ்.ஜெயக்குமார் போட்டியிடுகின்றனர்.

ஓடியாடி, விளையாடி  வாக்கு சேகரித்த வானதி… களைகட்டும் கோவை தெற்கு!!

இந்நிலையில் கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ரேஸ்கோர்ஸ் பகுதியில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், அங்கிருந்த பொதுமக்களுடன் சிறிது நேரம் பூ பந்து விளையாடியபடி வாக்குசேகரித்தார். பின்னர் RANA குடியிருப்பு சங்கம் மக்களிடம் கலந்துரையாடியும், அப்பகுதியில் உள்ள மக்களுடன் சேர்ந்து நடை பயிற்சி செய்தப்படியும் வாக்கு சேகரித்தார்.முன்னதாக கமல் ஹாசனும் டீக்கடைக்கு செல்வது, வாக்கிங் சென்றபடி ஓட்டு கேட்பது என தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருவதால் விஐபி தொகுதியான கோவை தெற்கு களைகட்டியுள்ளது.