லாக்டவுன் தாராளமாக போடுங்க.. ஆனால் மாதம் ரூ.5 ஆயிரம் கொடுங்க.. பா.ஜ.க. வலியுறுத்தல்

 

லாக்டவுன் தாராளமாக போடுங்க.. ஆனால் மாதம் ரூ.5 ஆயிரம் கொடுங்க.. பா.ஜ.க. வலியுறுத்தல்

மகாராஷ்டிராவில் லாக்டவுனை அமல்படுத்த விரும்பினால், அமைப்புசாரா துறையை சேர்ந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ. 5 ஆயிரம் கொடுங்க என்று உத்தவ் தாக்கரே அரசை பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் தற்போது அங்கு இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத வண்ணம் லாக்டவுனை அமல்படுத்த செயல்திட்டத்தை தயார் செய்யும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தவ்தாக்கரே உத்தரவிட்டார். இதனால் அம்மாநிலத்தில் விரைவில் லாக்டவுன் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் எதிர்க்கட்சியான பா.ஜ.க. வோ, அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு லாக்டவுன் தீர்வாகாது என்று குரல் எழுப்பியுள்ளது.

லாக்டவுன் தாராளமாக போடுங்க.. ஆனால் மாதம் ரூ.5 ஆயிரம் கொடுங்க.. பா.ஜ.க. வலியுறுத்தல்
சந்திரகாந்த் பாட்டீல்

இது தொடர்பாக அம்மாநில பா.ஜ.க. தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியதாவது: பா.ஜ.க. மட்டுமல்ல, அனைத்து வர்த்தகர்கள் மற்றும் அமைப்புசாரா துறையை சேர்ந்த அனைத்து தொழிலாளர்களும் லாக்டவுனை எதிர்க்கிறார்கள். மாநிலத்தில் கோவிட்-19 பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு லாக்டவுன் பதில் ஆகாது. லாக்டவுன் விதித்தால் நீங்கள் (மாநில அரசு) எந்தவொரு நிவாரண தொகுப்பையும் (பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்) வழங்கமாட்டீர்கள். கடந்த ஒரு வருடத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை மடோஸ்ரீக்குள் (முதல்வரின் இல்லம்) உட்கார்ந்து புரிந்து கொள்ள முடியாது.

லாக்டவுன் தாராளமாக போடுங்க.. ஆனால் மாதம் ரூ.5 ஆயிரம் கொடுங்க.. பா.ஜ.க. வலியுறுத்தல்
பா.ஜ.க.

இரவு ஊரடங்கு உத்தரவுக்கு நான் சம்மதிக்கிறேன். இரவில் யாரும் வெளியே செல்வதில்லை. உங்களுடன் சில (மாறில அரசாங்கத்தில்) சிலர் இரவு வாழ்க்கை விரும்புவதால் வெளியே செல்கிறார்கள். உண்மையில் நீங்கள் லாக்டவுனை விதிக்க விரும்பினால், ஒரு தொகுப்பை அறிவித்து, அமைப்புசாரா துறையை சேர்ந்த ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் கொடுங்கள். கோவிட்-19 நோயாளிகளின் பரிசோதனை, டிரேசிங் மற்றும் சிகிச்சை ஆகியவை கொரோனா தொற்றுநோய் பரவலை தடுக்க முக்கியமானவை, ஆனால் லாக்டவுன் பதில் ஆகாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.