• February
    21
    Friday

Main Area

Main



ஜல்லிக்கட்டுக்கு புதுக்கதை கட்டும் பாஜக! விளாசும் நெட்டிசன்கள்!!

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையொட்டி உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி  இன்று நடைபெற்றது. இதுமட்டுமின்றி பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளிலும் சீறி பாய்ந்த காளைகளை வெறிகொண்ட வீரர்கள் அடக்க முயற்சித்தனர். இதேபோல் வரும் 31 ஆம் தேதி வரை தமிழகம் முழுக்க பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படவுள்ளது. 

 

 

இந்நிலையில் ஜல்லிக்கட்டு குறித்து புது விளக்கம் ஒன்றை அளித்துள்ள பாஜக அதன் ட்விட்டர் பக்கத்தில், “அர்ச்சுனன் வீரத்தை சோதிக்க சிவன் வேடுவன் வடிவத்தில் அர்ச்சுனனுடன் மல்யுத்தம் செய்யும்போது இறைவனை தழுவுகின்ற வாய்ப்பு அர்ச்சுனனுக்கு கிட்டுகிறது. இந்த நிகழ்வை கொண்டு சிவனின் வாகனமாகிய நந்தியின் அம்சமான காளையோடு ஏறுதழுவுதலை "இந்துக்கள்" பின்பற்றி வருகின்றனர்.” என பதிவிட்டுள்ளது. 


இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வரலாற்று ரீதியாக இது உண்மையில்லை என்றும், இதற்கு ஆதாரம் இல்லை என்றும் பலரும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
 

2018 TopTamilNews. All rights reserved.