சமூக விரோதிகள் கூடாரமான பா.ஜ.க! – மார்க்சிஸ்ட் கம்யூ. பாலகிருஷ்ணன் பேச்சு

 

சமூக விரோதிகள் கூடாரமான பா.ஜ.க! – மார்க்சிஸ்ட் கம்யூ. பாலகிருஷ்ணன் பேச்சு

தமிழக பா.ஜ.க சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சமூக விரோதிகள் கூடாரமான பா.ஜ.க! – மார்க்சிஸ்ட் கம்யூ. பாலகிருஷ்ணன் பேச்சு


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “தமிழக பா.ஜ.க-வில் புதிதாக உறுப்பினர் சேர்ப்பு தீவிரமாக நடப்பதாக கூறினார்கள். ஆனால், எல்லா இடங்களிலும் கேள்விப்படும் தகவல் அதிர்ச்சி அடையும் வகையில் உள்ளது. குறிப்பாக சமூக விரோத சக்திகள், ரவுடிகள், கொலை, கொள்ளை, போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் சமூக விரோதிகளை பாரதிய ஜனதா கட்சியில் சேர்ப்பதாக தகவல் வந்துகொண்டே இருக்கிறது

சமூக விரோதிகள் கூடாரமான பா.ஜ.க! – மார்க்சிஸ்ட் கம்யூ. பாலகிருஷ்ணன் பேச்சு


இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சித் தலைவரிடம் கேள்வி எழுப்பிய போது, நாங்கள் யார் வந்தாலும் கட்சியில் சேர்த்துக்கொள்வோம். அவர்கள் பின்னணி எல்லாம் இப்போது பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று கூறியுள்ளார். இதன் மூலம், பகிரங்கமாக சமூக விரோதிகளின் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி மாறிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே, சென்னையில் பிரபல ரவுடி ரவி என்பவர் கட்சியில் இணைந்தார். சில தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு அருகே சூர்யா என்பவர் கட்சியில் சேர சென்ற போது அங்கு அவருக்கு பாதுகாப்பாக இருந்தவர்கள் பெரிய பெரிய கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருப்பது தெரிந்து போலீசார் கைது செய்துள்ளனர். தன் கூட்டாளிகள் கைது

சமூக விரோதிகள் கூடாரமான பா.ஜ.க! – மார்க்சிஸ்ட் கம்யூ. பாலகிருஷ்ணன் பேச்சு

செய்யப்படுவதை அறிந்து அந்த நபர் பா.ஜ.க கட்சித் தலைவர் ஒருவரின் காரில் ஏறி சென்றுள்ளார். சமீபத்தில் கஞ்சா (அபின்) கடத்திய வழக்கில் பா.ஜ.க நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். பெரம்பலூரில் ஒரு நிர்வாகி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக செய்தி வந்துள்ளது.
திட்டமிட்டு தமிழ்நாட்டில், யாரும் அந்த கட்சியில் வந்து இணைய முன்வராத நிலையில் சமூக விரோதிகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க தங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.
இது போன்ற சமூக விரோதிகளை பயன்படுத்தி மதக் கலவரத்தை உருவாக்க முடியும் என்ற ஆபத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இது மிகவும் ஆபத்தானது. தமிழக அரசு உடனடியாக கண்காணிப்போடு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் கட்சியில் சமூக விரோதிகள் தங்களுக்கு பாதுகாப்பு என்று நினைத்தால், நாளை அவர்களை போலீசாரால் கூட கைது செய்ய முடியாது. சமூக விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும். எனவே உரிய எச்சரிக்கையோடு காவல் துறை செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.