ஊரடங்கு காலத்தில் என்ன செய்தீர்கள்? – மாநில பா.ஜ.க தலைமையிடம் அறிக்கை கேட்ட மோடி

ஊரடங்கு காலத்தில் என்ன செய்தீர்கள்? – மாநில பா.ஜ.க தலைமையிடம் அறிக்கை கேட்ட மோடி

ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 100 நாட்களை கடந்துவிட்டது. இந்த காலக்கட்டத்தில் பா.ஜ.க மாநிலத் தலைமை சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் பற்றி அறிக்கை அளிக்கும்படி மாநில தலைவர்களுக்கு மோடி உத்தரவிட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

ஊரடங்கு காலத்தில் என்ன செய்தீர்கள்? – மாநில பா.ஜ.க தலைமையிடம் அறிக்கை கேட்ட மோடி
கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 24ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் மாநில பா.ஜ.க தலைமை அந்த அந்த மாநிலத்தில் மேற்கொண்ட பணிகள் பற்றிய விரிவான விளக்கத்தை தயார் செய்து வழங்க வேண்டும் என்று மோடி உத்தரவிட்டுள்ளதாக மாநில தலைவர்களுக்கு பா.ஜ.க தேசிய செயலாளர் அருண் சிங் உத்தரவிட்டுள்ளார். மாநிலங்கள் பிரசன்டேஷன் வடிவில் இதை தயார் செய்து வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் என்ன செய்தீர்கள்? – மாநில பா.ஜ.க தலைமையிடம் அறிக்கை கேட்ட மோடி

பிரதமர் மோடி முன்னிலையில் நமோ ஆப் உள்ளிட்ட பா.ஜ.க டிஜிட்டல் ஊடகங்களில் இந்த பிரசன்டேஷன் ஒளிபரப்பப்படும். ஒவ்வொரு மாநிலத்தின் மூத்த நிர்வாகிகள் ஒன்று சேர்த்து செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் பற்றிய தகவலை விளக்கி கூற வேண்டும். அவர்கள் செய்த பணிகள் அடிப்படையில் மோடி கருத்து கூறுவார். இதன் மூலம் நாடு முழுவதும் பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் மக்களுக்கு உதவும் ஆர்வம் அதிகரிக்கும் என்று பா.ஜ.க தரப்பில் கூறப்படுகிறது.