“பாமகவை விட ஒரு தொகுதி எக்ஸ்ட்ரா வேணும் ” : பாஜகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை!!

“பாமகவை விட ஒரு தொகுதி எக்ஸ்ட்ரா வேணும் ”  : பாஜகவுடன்  மீண்டும் பேச்சுவார்த்தை!!

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை இன்றும் நடைபெறுகிறது.

“பாமகவை விட ஒரு தொகுதி எக்ஸ்ட்ரா வேணும் ”  : பாஜகவுடன்  மீண்டும் பேச்சுவார்த்தை!!

இந்நிலையில் அதிமுக- பாஜக கூட்டணியில், தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் கடந்த 28 ஆம் தேதி நடைபெற்றது. இதை தொடர்ந்து மீண்டும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையானது சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் விடுதியில் நடந்தது. இதில் எல். முருகன், பொன். ராதாகிருஷ்ணன், கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டார். இருப்பினும் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையிலும் அதிமுக நடத்திய பேச்சுவார்த்தைக்கு பாஜக தலையசைக்கவில்லையாம். இதனால் இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

“பாமகவை விட ஒரு தொகுதி எக்ஸ்ட்ரா வேணும் ”  : பாஜகவுடன்  மீண்டும் பேச்சுவார்த்தை!!

இந்நிலையில் அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு குறித்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதை வித ஒரு தொகுதியாவது கூடுதலாக பெற்றுவிட வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. ஆனால் பாஜகவுக்கு 22 தொகுதிகள் அளிக்கவே அதிமுக தயாராகவுள்ளது. இந்த இழுபறியில் தான் தொகுதிகள் எண்ணிக்கை குறித்து இன்னும் முடிவு எட்டப்படவில்லை. இன்றைய பேச்சுவார்த்தை அமைச்சர்களுடன் பாஜக மாநில தலைவர் எல். முருகன் உள்ளிட்டோர் ஆலோசனை செய்த பிறகு, இதன் இறுதிக்கட்ட முடிவுகள் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.