இளைஞர்களை கொள்ளையடித்து, ஏமாற்றும் கட்சி திரிணாமுல் காங்கிரஸ்… பா.ஜ.க. குற்றச்சாட்டு

 

இளைஞர்களை கொள்ளையடித்து, ஏமாற்றும் கட்சி திரிணாமுல் காங்கிரஸ்… பா.ஜ.க. குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் இளைஞர்களை கொள்ளையடித்து ஏமாற்றுவதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளது என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

மேற்கு வங்கம் சிலிகுரியில், சுவாமி விவேகானந்தரின் 158வது பிறந்த நாளை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது. அந்த பேரணியில் இடம் பெற்று இருந்த கண்காட்சி வாகனத்தில் மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜியின் படம் இருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆன்மீக தலைவரின் கொள்கைகளை ஊக்குவிப்பதற்கு பதிலாக அபிஷேக் பானர்ஜியை முன்னிலைப்படுத்துகிறது என்று பா.ஜக. குற்றம் சாட்டியுள்ளது.

இளைஞர்களை கொள்ளையடித்து, ஏமாற்றும் கட்சி திரிணாமுல் காங்கிரஸ்… பா.ஜ.க. குற்றச்சாட்டு
அபிஷேக் பானர்ஜி

இது தொடர்பாக மேற்கு வங்க பா.ஜ.க.வின் பொதுச் செயலாளர் சயந்தன் போஸ் கூறியதாவது: வங்கத்தின் கொள்கைவாதிகளை அவமானப்படுத்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முயற்சி செய்கிறது. பேரணி சென்ற வாகனத்தின் முன்பக்கத்தில் அபிஷேக் பானர்ஜியின் படமும், வாகனத்தின் பின்புறத்தில் விவேகானந்தர் படமும் இருந்தன. அவர்கள் அபிஷேக் பானர்ஜியை மட்டுமே ஊக்குவிக்க விரும்புகிறார்கள். விவேகானந்தரின் எந்த செய்தியையும் கொடுக்கக் கூடாது என்பதில் அவர்கள் தெளிவாக உள்ளதை வெளிப்படுத்துகிறது.

இளைஞர்களை கொள்ளையடித்து, ஏமாற்றும் கட்சி திரிணாமுல் காங்கிரஸ்… பா.ஜ.க. குற்றச்சாட்டு
சயந்தன் போஸ்

உறுதியுடனும், தைரியத்துடனும் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பது விவேகானந்தர் சொன்னது. திரிணாமுல் காங்கிரசின் சித்தாந்தமும், செயல்படும் பாணியும் சுவாமி விவேகானந்தருடன் பொருந்தவில்லை. பானர்ஜியும், அவரது கட்சியும் இளைஞர்களை கொள்ளையடித்து ஏமாற்றுவதற்காக இங்கு வந்தன. விவேகானந்தரின் கொள்கைக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கொள்கைக்கும் இடையிலான வித்தியாசம் மிகவும் தெளிவாகவும், அப்பட்டமாகவும் இருக்கிறது.