“பசும்பொன் சிலை அருகில் கருணாநிதி சிலையா?” – இழிவாக பேசும் பாஜக!

 

“பசும்பொன் சிலை அருகில் கருணாநிதி சிலையா?” – இழிவாக பேசும் பாஜக!

மறைந்த முதலமைச்சர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து அவருக்கு மதுரையில் சிலை வைக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட திமுக பொறுப்பாளர் கோ. தளபதி, மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தார். அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால் தளபதி மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தையடுத்து, சிம்மக்கல்லில் கருணாநிதிக்குச் சிலை வைக்க அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது. சிம்மக்கல் மைய நூலகத்தின் எதிரே சிலை அமைக்கப்பட்டுள்ளது. நாளை ஸ்டாலின் சிலையைத் திறந்துவைப்பதால், தற்போது சிலை நிறுவும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.

“பசும்பொன் சிலை அருகில் கருணாநிதி சிலையா?” – இழிவாக பேசும் பாஜக!

இச்சூழலில் சிலை நிறுவுவதற்கு ஆட்சேபனை தெரிவித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம ஸ்ரீநிவாசன் மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் கொடுத்துள்ளார். அக்கடிதத்தில், “சிம்மக்கல் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி. அப்பகுதியில் ஒரு கட்சித் தலைவரின் சிலை நிறுவப்பட்டால், கட்சி சம்பந்தமான பணிகள் நடைபெறும். அப்போது மக்கள் அவதிப்படுவர்.

Image

அதேபோல வஉசி, பசும்பொன் தேவர் ஆகியோர் சிலை அருகே கருணாநிதியின் சிலையை நிறுவினால் அது அந்தத் தலைவர்களுக்குப் புகழ் சேர்க்காது. சிலையை வேறு இடத்தில் நிறுவுவது தொடர்பாக எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. சிம்மக்கல்லில் சிலை வைக்க அனுமதிக்கக் கூடாது. நீதிமன்ற உத்தரவின்படி மாவட்ட ஆட்சியர் சிலை வைக்க வேறு இடத்தைப் பரிசீலிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளது.

Image

பசும்பொன் தேவர், வஉசி செய்ததைக் காட்டிலும் சிறந்தவர் கலைஞர் கருணாநிதி. அவர் எந்தவிதத்திலும் இவர்களுக்குத் தாழ்ந்தவர் இல்லை. மேற்கூறிய தலைவர்கள் தமிழ்நாட்டிற்குச் செய்ததைக் காட்டிலும் தமிழ்நாட்டிற்குச் செய்து கட்டிக்காத்தவர் எங்கள் தலைவர் என திமுக அனுதாபிகளும் தொண்டர்களும் இதற்கு எதிர்வினையாற்றிருக்கிறார்கள். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலினின் எதிர்வினை எப்படியிருக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.