சுயமரியாதை கொண்ட தலைவர்கள் யாரும் அந்த கட்சியில் பணியாற்ற முடியாது.. லாலு கட்சியை தாக்கிய பா.ஜ.க.

சுயமரியாதை கொண்ட தலைவர்கள் யாரும் அந்த கட்சியில் பணியாற்ற முடியாது.. லாலு கட்சியை தாக்கிய பா.ஜ.க.

பீகாரின் முன்னாள் முதல்வரும், தற்போது ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறையில் இருக்கும் லாலு பிரசாத்தின் கட்சி ராஷ்டிரிய ஜனதா தளம். தற்போது அந்த கட்சியின் அனைத்துமாக இருப்பர் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ். இந்நிலையில் நேற்று அந்த கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி 6 ஆண்டுகள் வெளியேற்றப்பட்டனர்.

சுயமரியாதை கொண்ட தலைவர்கள் யாரும் அந்த கட்சியில் பணியாற்ற முடியாது.. லாலு கட்சியை தாக்கிய பா.ஜ.க.

அந்த கட்சியில் சுய மரியாதை உள்ள தலைவர்களால் பணியாற்ற முடியாது என ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் அந்த கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது குறித்து பா.ஜ.க. கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க.வின் ஷாஹனவாஸ் ஹூசைன் கூறியதாவது: ராஷ்டிரிய ஜனதா தள கட்சியில் தேஜஸ்வி யாதவ் எல்லாவற்றும இறுதி வார்த்தை வைத்துள்ளார். அதனால்தான், சுய மரியாதை உள்ள எந்தவொரு தலைவரும் ராஷ்டிரிய ஜனதா தளத்தில் பணியாற்ற முடியாது.

சுயமரியாதை கொண்ட தலைவர்கள் யாரும் அந்த கட்சியில் பணியாற்ற முடியாது.. லாலு கட்சியை தாக்கிய பா.ஜ.க.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு எதிர்காலம் இல்லை. பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் மேற்கொண்ட சிறப்பான பணிகள் காரணமாக அவரை இழக்க மாநில மக்கள் விரும்பவில்லை. லோக் ஜனசக்தி கட்சி, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க. ஒன்றாக இணைந்து தேர்தலில் போட்டியிடும், நிதிஷ் குமார் தலைமையில் அரசை அமைக்கும். இதனால்தான் ராஷ்டிரிய ஜனதா தளத்திலிருந்து ஏராளமான தலைவர்கள் வெளியேறுகின்றனர், அதனால்தான் ராஷ்டிரிய ஜனதா கட்சி தனது சொந்த தலைவர்களை வெளியேற்றுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.