இம்ரான் கானுக்கும், சமாஜ்வாடி கட்சி தலைவர்களுக்கும் வித்தியாசம் இல்லை.. பா.ஜ.க. தாக்கு

 

இம்ரான் கானுக்கும், சமாஜ்வாடி கட்சி தலைவர்களுக்கும் வித்தியாசம் இல்லை.. பா.ஜ.க. தாக்கு

சமாஜ்வாடி எம்.பி. தலிபான்களை பராட்டியதை குறிப்பிட்டு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், சமாஜ்வாடி கட்சி தலைவர்களுக்கும் வித்தியாசம் இல்லை என்று அந்த கட்சியை பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றி விட்டனர். தலிபான்கள் தற்போது புதிய ஆட்சியை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்களுக்கு பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஆதரித்தாலும், பெரும்பாலான நாடுகள் ஆப்கன் நிலைமை குறித்து கவலையில் உள்ளன. சம்பல் தொகுதி சமாஜ்வாடி எம்.பி. ஷபிகுர் ரஹ்மான் பார்க் கூறியதாவது: இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தபோது, நம் நாடு சுதந்திரத்துக்காக போராடியது. இப்போது தலிபான்கள் ஆப்கானிஸ்தானுக்கு விடுதலை அளித்து அந்நாட்டை ஆட்சி செய்ய விரும்புகிறது.

இம்ரான் கானுக்கும், சமாஜ்வாடி கட்சி தலைவர்களுக்கும் வித்தியாசம் இல்லை.. பா.ஜ.க. தாக்கு
ஷபிகுர் ரஹ்மான் பார்க்

அமெரிக்கா, ரஷ்யா போன்ற வலுவான நாடுகளை கூட தலிபான்கள் தங்கள் நாட்டில் அனுமதிக்காத ஒரு சக்தி. ஆப்கானிஸ்தானின் சுதந்திரம் அவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா ஏன் ஆட்சி செய்யும்? அங்கு தலிபான் ஒரு படை, ஆப்கானிஸ்தான் மக்கள் அதன் தலைமையின் கீழ் சுதந்திரத்தை விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். சமாஜ்வாடி எம்.பி. தலிபான்களுக்கு ஆதரவாக பேசியிருப்பதை பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.

இம்ரான் கானுக்கும், சமாஜ்வாடி கட்சி தலைவர்களுக்கும் வித்தியாசம் இல்லை.. பா.ஜ.க. தாக்கு
கே.பி. மவுரியா

இது தொடர்பாக உத்தர பிரதேசத்தின் துணை முதல்வர் கே.பி. மவுரியா கூறுகையில், சமாஜ்வாடி கட்சி எதை வேண்டுமானாலும் சொல்லலாம். தலிபான்கள் குறித்து சமாஜ்வாடி கட்சியிலிருந்து அத்தகைய அறிக்கை வந்தால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், சமாஜ்வாடி கட்சி தலைவர்களுக்கும் என்ன வித்தியாசம்? என்று தெரிவித்தார்.