மக்கள் நீதி மய்யத்துக்கு செக் வைக்கும் பாஜக.. ஷாக்கான கமல்ஹாசன்!

 

மக்கள் நீதி மய்யத்துக்கு செக் வைக்கும் பாஜக.. ஷாக்கான கமல்ஹாசன்!

திமுக, அதிமுகவுக்கு எதிராக 3ஆவது அணியாக மக்கள் நீதி மய்யம் உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. பாஜகவை விட மக்கள் நீதி மய்யத்துக்கு மவுசு கூடியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இதனால் மக்கள் நீதி மய்யத்துக்கு செக் வைக்கும் அனைத்து முயற்சிகளையும் பாஜக செய்து கொண்டிருக்கிறதாம்.

மக்கள் நீதி மய்யத்துக்கு செக் வைக்கும் பாஜக.. ஷாக்கான கமல்ஹாசன்!

கமல்ஹாசன் பெரும்பாலும் திமுகவை தான் விமர்சிப்பார். பாஜகவை அவர் விமர்சிப்பது சற்று குறைவு தான். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக, பாஜகவை குறி வைத்து பேசிய அவர் இந்த முறை திமுக, அதிமுகவை மட்டும் விமர்சிப்பது ஏன் என்ற கேள்வி வெகுவாக எழுந்த வண்ணமே உள்ளது. இதை செய்தியாளர்கள் நேற்று அவரிடம் வெளிப்படையாகவே கேட்டு விட்டனர். அதற்கு பதிலளித்த அவர், எல்லாரையும் தான் நான் விமர்சிக்கிறேன். இனிமே நான் தாக்கும் அனைவரும் எதிரிகள் தான் என தெரிவித்திருந்தார்.

மக்கள் நீதி மய்யத்துக்கு செக் வைக்கும் பாஜக.. ஷாக்கான கமல்ஹாசன்!

சூரப்பாவுக்கு எதிரான அரசின் நடவடிக்கைக்கு குரல் கொடுத்த கமல்ஹாசனை, பாஜகவின் பி டீம் என விமர்சிக்க தொடங்கி விட்டார்கள் சிலர். அப்போதில் இருந்தே அந்த புனைப்பெயர் அவரை தொற்றிக் கொண்டது. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனுக்கு எதிராக பாஜக ஒவ்வொரு கிராமமாக சென்று அவர் பி டீம் என பிரச்சாரம் செய்து வருகிறார்களாம். தொகுதி பங்கீடு, கூட்டணி உள்ளிட்ட கட்சி பணிகளில் கமல்ஹாசன் பிஸியாக இருந்து வரும் வேளையில், பாஜகவின் இந்த மூவ் கமலை அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறதாம்.