காங்கிரஸ் பாசம் உள்ளதா..? – ஜோதிராதித்ய சிந்தியா பதிலால் பா.ஜ.க அதிர்ச்சி

 

காங்கிரஸ் பாசம் உள்ளதா..? – ஜோதிராதித்ய சிந்தியா பதிலால் பா.ஜ.க அதிர்ச்சி

காங்கிரஸ் தலைமை தொடர்பான பிரச்னை பற்றி கருத்து கூற முடியாது என்று சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா கூறியிருப்பது அவருக்கு இன்னும் காங்கிரஸ் பாசம் உள்ளதா என்ற அதிர்ச்சியையும் அதிருப்தியையும் பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்துக்கு சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா வந்திருந்தார். அவரிடம் நிருபர்கள், தற்போது காங்கிரஸ் தலைவர் யார் என்று நடக்கும் சர்ச்சை பற்றி கேள்வி எழுப்பினர்.

காங்கிரஸ் பாசம் உள்ளதா..? – ஜோதிராதித்ய சிந்தியா பதிலால் பா.ஜ.க அதிர்ச்சி


அதற்கு ஜோதிராதித்ய சிந்தியா, “இது காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரம். இது பற்றி நான் கருத்து கூற முடியாது. நான் தற்போது பா.ஜ.க உறுப்பினர். பா.ஜ.க-வில் இருந்து கொண்டு வேறு கட்சியின் உள் விவகாரங்கள் தொடர்பாக கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது” என்றார்.

காங்கிரஸ் பாசம் உள்ளதா..? – ஜோதிராதித்ய சிந்தியா பதிலால் பா.ஜ.க அதிர்ச்சி


காங்கிரஸ் கட்சித் தலைவர் தொடர்பாக எழுந்த சர்ச்சை பற்றி மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சௌகான் காரசாரமான கருத்தைத் தெரிவித்திருந்தார். அம்மாநில அமைச்சர் ஒருவர் காங்கிரஸ் தலைமை என்பது பள்ளி முதல்வாின் மகன்கள் மட்டுமே முதன்மை பெறும் இடம் என்று கிண்டல் செய்திருந்தார். இந்த நிலையில் அது காங்கிரசின் உள்கட்சி விவகாரம் என்று சிந்தியா கூறியிருப்பது பா.ஜ.க தொண்டர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அவருக்கு இன்னும் காங்கிரஸ் பாசம் விடவில்லை போல என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.