‘கேம் சேஞ்சர்’ ரங்கசாமிக்கு பாஜக கெடு… உடையும் ‘ஆட்சி கவிழ்ப்பு’ கூட்டணி?

 

‘கேம் சேஞ்சர்’ ரங்கசாமிக்கு பாஜக கெடு… உடையும் ‘ஆட்சி கவிழ்ப்பு’ கூட்டணி?

தமிழகத்தைக் காட்டிலும் புதுச்சேரியில் நிகழும் அரசியல் ஆட்டங்கள் பிரமிக்க வைக்கின்றன. தமிழகத்தையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு அரசியல் நகர்வுகள் நடக்கின்றன. குறிப்பாக கேம் மேக்கராக என்ஆர் காங்கிரஸுன் ரங்கசாமி பார்க்கப்படுகிறார். காங்கிரஸ் கட்சியெல்லாம் ஆட்டத்திலேயே இல்லை. கூட்டணியில் இருக்கும் திமுக நிர்வாகிகள் கூட ரங்கசாமியுடன் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. நேற்று மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் ஓபனாகவே பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டனர்.

Alliance with AIADMK and BJP will continue, says Rangasamy - The Hindu

தேர்தலுக்கு முந்தையை கணிப்பிலேயே என்ஆர் காங்கிரஸுக்குத் தான் பெரும்பான்மையான ஆதரவு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அதனால் தான் ரங்கசாமியின் அரசியல் நகர்வு அனைவராலும் உன்னிப்பாகக் கவனித்துவருகிறது. ரங்கசாமி அமைதி காத்தாலும், அவருடைய நிலைப்பாடு ஒன்று மட்டுமே. தன்னை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும். அதிலிருந்து அவர் பின்வாங்க மாட்டார் என அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இதை ஏற்றுக்கொண்டு யார் வந்தாலும் கூட்டணிக்கு சிக்னல் கொடுக்கப்படும். இல்லையென்றால் தனித்துப் போட்டியிடப்படும்.

‘கேம் சேஞ்சர்’ ரங்கசாமிக்கு பாஜக கெடு… உடையும் ‘ஆட்சி கவிழ்ப்பு’ கூட்டணி?

பாஜகவுக்குச் சிக்கல் எங்கு ஆரம்பிக்கிறதென்றால் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்திடம் தான். ஏனென்றால் காங்கிரஸ் ஆட்சிக் கவிழ்ப்புக்கான அஸ்திவாரமே நமச்சிவாயம் தான். காங்கிரஸில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை; முதலமைச்சர் ஆக்குவார்கள் என்று நினைத்த சமயத்தில் நாராயணசாமியை முன்மொழிந்தார்கள். இதுதான் நமச்சிவாயத்தின் அதிருப்திக்குக் காரணம். இதைக் கொண்டும் முதலமைச்சர் ஆசை காட்டியும் தான் பாஜக அவரை இழுத்தது. தற்போது ரேஸில் ரங்கசாமி இருப்பதால், யாரை முன்னிறுத்துவது என்ற குழப்பம் பாஜகவுக்கு வந்துவிட்டது.

‘கேம் சேஞ்சர்’ ரங்கசாமிக்கு பாஜக கெடு… உடையும் ‘ஆட்சி கவிழ்ப்பு’ கூட்டணி?

நமச்சிவாயத்துக்காக ரங்கசாமியைச் சமாதானப்படுத்தும் பாஜகவின் முயற்சி தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. இதனால் தான் எந்த முடிவையும் அறிவிக்காமல் மௌனம் சாதிக்கிறார் ரங்கசாமி. இன்னொரு பக்கம் நமச்சிவாயம் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நமச்சிவாயத்தை விட்டால் கூட பாஜகவுக்கு இழப்பு இல்லை; ரங்கசாமியை விட்டால் தாமரையை மலரவைக்க நிச்சயம் முடியாத காரியம். அங்கு மக்கள் மனநிலை முழுவதும் ரங்கசாமி சார்புடையதாக இருக்கிறது. அதேபோல கிரண்பேடி மீதான அதிருப்தி பாஜக பக்கம் திரும்பியிருக்கிறது. எப்படி கூட்டி கழித்துப் பார்த்தாலும் சேதாரம் பாஜகவுக்குத் தான்.

‘கேம் சேஞ்சர்’ ரங்கசாமிக்கு பாஜக கெடு… உடையும் ‘ஆட்சி கவிழ்ப்பு’ கூட்டணி?

இச்சூழலில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், “ரங்கசாமியுடன் கூட்டணி அமைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்; அது குறித்த அறிவிப்பை அவர் தான் அறிவிக்க வேண்டும். அவரது தேவை தொடர்பாக இதுவரை சரியான பதிலை ரங்கசாமி தெரிவிக்கவில்லை. கூட்டணிக்கு ரங்கசாமி வராவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மேலிடம் முடிவு செய்யும். அவருக்கான 24 மணி நேர கெடு முடிந்த நிலையில் எங்களின் முயற்சி முடிந்தது. கூட்டணியில் ரங்கசாமி இருப்பது தொடர்பாக 24 மணி நேரத்துக்குள் தெரியப்படுத்தப்படும்” என்றார்.

‘கேம் சேஞ்சர்’ ரங்கசாமிக்கு பாஜக கெடு… உடையும் ‘ஆட்சி கவிழ்ப்பு’ கூட்டணி?

இதன்மூலம் அதிமுக-பாஜக-என்ஆர் காங்கிரஸ் கூட்டணி உடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே இருக்கிறது. அதேபோல ரங்கசாமி ஆதரவாளர்கள் தனித்துப் போட்டியிடவே விரும்புகின்றனர். புதுச்சேரியின் முடிவு ரங்கசாமி கையில் (Now ball is in Rangaswamy court). காங்கிரஸ், திமுக உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகளின் அணிக்கு ரங்கசாமி தலைமை தாங்க வேண்டுமென திமுக முன்னாள் அமைச்சரும், காரைக்கால் திமுக அமைப்பாளருமான நாஜிம் அழைப்பு விடுத்தது ‘கவனிக்கத்தக்கது’.