ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு- பா.ஜ.க., தோல்விகளை மறைக்க பொய் குற்றச்சாட்டு- காங்கிரஸ்

ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு- பா.ஜ.க., தோல்விகளை மறைக்க பொய் குற்றச்சாட்டு- காங்கிரஸ்

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் குலாப் சந்த் கட்டாரியா தலைமையில் பா.ஜ.க. பிரநிதிகள் கடந்த புதன்கிழமையன்று அம்மாநில கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்தனர். அப்போது, பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக, பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான கடுமையான குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு கால அவகாசம் மற்றும் இது போன்ற வழக்குகளை திறம்பட கண்காணிக்க புதிய கொள்கையை வகுக்க வகுக்க மாநில அரசுக்கு உத்தரவிடுமாறு கவர்னரிடம் பா.ஜ.க. தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு- பா.ஜ.க., தோல்விகளை மறைக்க பொய் குற்றச்சாட்டு- காங்கிரஸ்
முதல்வர் அசோக் கெலாட்

மேலும் கவர்னரிடம் பா.ஜ.க.வின் தாக்கல் செய்த குறிப்பில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த 20 மாதங்களில் பெண்கள், தலித்துக்கள், பழங்குடியினர் மற்றும் பொது மக்களுக்கு எதிரான குற்றங்கள் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அசோக் கெலாட் முதல்வராக பதவியேற்ற 2018 டிசம்பர் முதல் 2020 ஆகஸ்ட் வரை மாநிலத்தில் மொத்தம் 4.35 லட்சம் வழக்குகள் பதிவாகி உள்ளன.

ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு- பா.ஜ.க., தோல்விகளை மறைக்க பொய் குற்றச்சாட்டு- காங்கிரஸ்
கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா

அதில், 11,200 பாலியல் பலாத்காரம், ஈவ் டீசிங் மற்றும் பாலியல் வன்மை வழக்குகளும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் குற்றச்சாட்டை காங்கிரஸ் மறுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அர்ச்சனா சர்மா கூறுகையில், நாடு முழுவதும் தனது சொந்த தோல்விகளை மறைக்க பா.ஜ.க. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறது. மக்களின் குறிப்பாக பெண்கள் மற்றும் தலித்துகளின் நலனுக்காக மாநில அரசு உறுதி பூண்டுள்ளது என தெரிவித்தார்.