தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பாஜக மீண்டும் பேச்சுவார்த்தை

 

தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பாஜக மீண்டும் பேச்சுவார்த்தை

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழக தேர்தல் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. குறிப்பாக கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டில் பாமகவுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் உடன் அமித்ஷா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். பாஜகவுக்கு 22 முதல் 25 சீட்டுகள் ஒதுக்க அதிமுக திட்டமிட்ட நிலையில், 30 க்கும் மேற்பட்ட சீட்டுகளை கேட்டு பாஜக தொல்லைக்கொடுப்பதாக கூறப்படுகிறது.

தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பாஜக மீண்டும் பேச்சுவார்த்தை

இந்நிலையில் சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பாஜக மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அதிமுக சார்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் வைத்திலிங்கம், கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பாஜக தரப்பில் எல்.முருகன், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.