• March
    28
    Saturday

Main Area

Main



பாஜக தி்டீர் ராஜினாமா!  சொன்னதை செய்து காட்டிய சிவசேனா!

சிவசேனா
சிவசேனா

மகாராஷ்டிரத்தில் பாஜக ஆட்சியமைத்ததை எதிர்த்து, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட, நீதிபதிகள் அதிக நாட்கள் தர மறுத்து, நாளை மாலை 5 மணிக்கு மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. அதற்குள் இடைக்கால சபாநாயகரையும் தேர்ந்தெடுத்து, புதிய எம்எல்ஏக்களுக்கு நாளைய தினமே அவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்த பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

siva sena and bjp

இந்நிலையில், மகாராஷ்ட்ரா மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் திடீரென இன்று ராஜினாமா செய்துள்ளார். அறுதிபான்மை இல்லாததால் பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் சிவசேனா உள்ளிட்ட மூன்று கட்சிகளின் கூட்டணி அரசு நாளை பதவி ஏற்குமென தகவல்கள் வெளியாகி உள்ளன.   மக்கள் பா.ஜ.க. பக்கம் இருந்தாலும் அறுதி பெரும்பான்மை இல்லாததால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.  அதன் பின்னர் ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவர், அங்கு தமது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். கடந்த சனிக்கிழமை அன்று பதவி ஏற்ற பட்னாவிஸ், நான்கே நாட்களில் பதவி விலகி உள்ளார். இந்நிலையில் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக சிவசேனா கூறியுள்ளது. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க உள்ளதாகவும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிவசேனா கட்சியே முதலமைச்சர் பொறுப்பை வகிக்கும் என்றும் அந்த கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.