பாஜகவினர் வைத்த கொடிக்கம்பம் அகற்றம்; மதுரவாயலில் பாஜக ஆர்ப்பாட்டம்!

 

பாஜகவினர் வைத்த கொடிக்கம்பம் அகற்றம்; மதுரவாயலில் பாஜக ஆர்ப்பாட்டம்!

சென்னை மதுரவாயிலில் பாஜகவினர் வைத்த கொடிக்கம்பத்தை மாநகராட்சியின் அகற்றியதால், மதுரவாயலில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். மோடியின் பிறந்தநாளை ஒட்டி நாடு முழுவதும் பாஜகவினர் வெகு விமர்சையாக கொண்டாடினர். அந்த வகையில், சென்னையிலும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் மோடியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மதுரவாயல் ஏரிக்கரை பகுதியில் சாலையோரத்தில் பாஜகவினர் அமைத்திருந்த கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றிய முருகன், மோடிக்காக 70 அடி நீளத்தில் தயாரிக்கப்பட்ட கேக்கை வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார். மேலும், ஆட்டம் பாட்டத்துடன் பாஜகவினர் மோடி பிறந்தநாளை கொண்டாடினர்.

பாஜகவினர் வைத்த கொடிக்கம்பம் அகற்றம்; மதுரவாயலில் பாஜக ஆர்ப்பாட்டம்!

இதனையடுத்து, பாஜகவினர் அமைத்த கொடிக்கம்பம் விபத்து நேரும் அளவுக்கு வைக்கப்பட்டிருந்ததாலும் நெடுஞ்சாலைக்கு துறைக்கு சொந்தமான இடம் என்பதாலும் நேற்று இரவு மாநகராட்சி அதிகாரிகள் அதனை ஜேசிபி-ஐ வைத்து அகற்றினர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில், கொடிக்கம்பத்தை அகற்றியதை எதிர்த்து மதுரவாயிலில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.