மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கிய பாஜகவினர்

 

மோடியின்  பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கிய பாஜகவினர்

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் 70வது பிறந்தநாளான இன்று இந்தியா முழுவதும் உள்ள பாஜக கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவிலில் பாஜகவினர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

மோடியின்  பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கிய பாஜகவினர்

பின்னர் பொதுமக்கள், பேருந்து பயணிகள், கடை வியாபாரிகள், பாதசாரிகள் என அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி பிறந்த நாளை கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்கள்.

மோடியின்  பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கிய பாஜகவினர்