“தமிழக ஆட்சியில் பாஜக பங்குபெற வாய்ப்பு” – பொன்.ராதாகிருஷ்ணன்

 

“தமிழக ஆட்சியில் பாஜக பங்குபெற வாய்ப்பு” – பொன்.ராதாகிருஷ்ணன்

தேர்தலில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்று ஆட்சியில் பாஜக பங்கு பெற வாய்ப்பு இருப்பதாக பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை தீவிரப் படுத்தி வருகின்றன. எந்த தேர்தலுக்கும் இல்லாத வகையில், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு எதிர்பார்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இதன் முக்கிய காரணம் தமிழக அரசியலில் பெரும்பங்கு வகித்த கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாதது தான். இதனால் எந்த திமுக வெல்லுமா? அதிமுக வெல்லுமா? என தமிழக மக்கள் தேர்தலை எதிர்நோக்கி காத்துக் கிடக்கின்றனர்.

“தமிழக ஆட்சியில் பாஜக பங்குபெற வாய்ப்பு” – பொன்.ராதாகிருஷ்ணன்

தேசிய காட்சியாகவே இருந்தாலும் அதிமுக மற்றும் திமுகவுடன் கூட்டணி அமைக்கும் நிலை தான் தமிழகத்தில் நீடித்து வரும் நிலையில், பாஜக தனது கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பாஜகவினரை சட்டமன்றத்திற்குள் அனுப்புவது தான் எனது முதற்கட்ட வேலை என எல்.முருகன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

“தமிழக ஆட்சியில் பாஜக பங்குபெற வாய்ப்பு” – பொன்.ராதாகிருஷ்ணன்

இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்று ஆட்சியில் பாஜக பங்குபெற வாய்ப்பு இருக்கிறது என்றும் நாங்கள் யாரையும் குத்தப் போவதில்லை, குற்றம் உள்ளவர்களையே வேல் குத்தும் என்றும் கூறினார்.