ஜிகே வாசனுக்கு ஒதுக்கிய தொகுதி… பாஜக தலைவர் வேட்புமனு – அதிமுக கூட்டணிக்குள் சலசல!

ஜிகே வாசனுக்கு ஒதுக்கிய தொகுதி… பாஜக தலைவர் வேட்புமனு – அதிமுக கூட்டணிக்குள் சலசல!

தற்போது தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் தூத்துக்குடியில் பாஜக மேற்கு மண்டல தலைவர் ராஜவேலு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். குறிப்பாக அவர் சுயேச்சையாகப் போட்டியிடக் கூடிய வகையில் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். தனக்கு சீட் கிடைக்காத அதிருப்தியில் இப்படி செய்ததாகக் கூறப்படுகிறது. இவ்விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

ஜிகே வாசனுக்கு ஒதுக்கிய தொகுதி… பாஜக தலைவர் வேட்புமனு – அதிமுக கூட்டணிக்குள் சலசல!

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் பாஜக, பாமக, ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. தமாகவுக்கு ஆறு தொகுதிகளை அதிமுக தலைமை ஒதுக்கியிருக்கிறது. அதில் தூத்துக்குடி தொகுதியும் ஒன்று. இங்கு விஜயசீலன் என்பவரை வேட்பாளராக ஜிகே வாசன் அறிவித்திருக்கிறார். கூட்டணியில் இருக்கும் கட்சிக்காரர் நிற்கும் தொகுதியில் பாஜக தலைவர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பது அதிமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக பாஜக தலைமை அழுத்தம் கொடுத்து வேட்புமனுவை வாபஸ் பெற வைக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ஜிகே வாசனுக்கு ஒதுக்கிய தொகுதி… பாஜக தலைவர் வேட்புமனு – அதிமுக கூட்டணிக்குள் சலசல!

திமுக சார்பில் கீதா ஜீவன் களம் காண்கிறார். கீதா ஜீவனைப் பொறுத்தவரையில் 2006 மற்றும் 2016ஆம் ஆண்டு தேர்தல்களில் வெற்றிபெற்று எம்எல்ஏவானார். மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் கனிமொழி வெற்றிபெற்றார். வெற்றிபெற்றதோடு நில்லாமல் தூத்துக்குடி மக்களிடம் செல்வாக்கு பெற்றவராகவும் உயர்ந்திருக்கிறார். அடிக்கடி தொகுதி பக்கம் தலைகாட்டுவது, நலத்திட்ட உதவிகள் செய்வது என நல்ல பெயரை எடுத்திருக்கிறார்.

ஜிகே வாசனுக்கு ஒதுக்கிய தொகுதி… பாஜக தலைவர் வேட்புமனு – அதிமுக கூட்டணிக்குள் சலசல!

கனிமொழிக்கான ஆதரவு அலையும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுக்கு எதிரான அதிமுக எதிர்ப்பு அலையும் இணைந்து திமுக மீண்டும் வெற்றிவாகை சூட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இதைக் கணக்கில் கொண்டே அதிமுக தலைமை நேக்காக ஜிகே வாசனுக்கு தூத்துக்குடியைத் தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இச்சூழலில் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது ஜிகே வாசனை அப்செட் செய்ய வைத்துள்ளது.