சென்னை வந்த எல்.முருகன்; பாஜகவினர் உற்சாக வரவேற்பு!

 

சென்னை வந்த எல்.முருகன்; பாஜகவினர் உற்சாக வரவேற்பு!

மத்திய அமைச்சரான பிறகு டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய எல்.முருகனுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் எல்.முருகன். தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் பதவியேற்ற பிறகே, பல சினிமா பிரபலங்கள் பாஜகவில் இணைந்தனர். அதுமட்டுமில்லாமல் 20 ஆண்டுகளாக தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டுமென்ற கனவோடு காத்திருந்த பாஜக, இவரது தலைமையில் தேர்தலை சந்தித்த போது தான் நான்கு இடங்களில் வெற்றி பெற்று சட்டமன்ற தொகுதி நுழைந்தது. இருப்பினும் எல்.முருகன் தாராபுரத்தில் தோல்வியடைந்தது கட்சியினரை அதிர்ச்சியடைய செய்தது.

சென்னை வந்த எல்.முருகன்; பாஜகவினர் உற்சாக வரவேற்பு!

இதையடுத்து எல்.முருகனுக்கு சிறந்த பதவி வழங்க எண்ணிய பாஜக தலைமை அவரை மத்திய இணையமைச்சராக்கியது. அவருக்கு மீன்வளத்துறை, கால்நடை மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை வழங்கப்பட்டது. பதவியேற்ற பின் இன்று முதல் முறையாக எல்.முருகன் சென்னைக்கு வந்தார். அவரை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் குவிந்திருந்த பாஜகவினர் பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக பாஜகவின் புதிய தலைவராக பதவி ஏற்கும் அண்ணாமலையின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் சென்னை வந்திருப்பதாக தெரிகிறது.