இரண்டு பேரும் சீனாவுக்கு போய் குடியேறுங்க… பருக் அப்துல்லா, ராகுல் காந்தியை சாடிய பா.ஜ.க.

இரண்டு பேரும் சீனாவுக்கு போய் குடியேறுங்க… பருக் அப்துல்லா, ராகுல் காந்தியை சாடிய பா.ஜ.க.

சீனாவுக்கு சென்று குடியேறுங்க என்று பருக் அப்துல்லா மற்றும் ராகுல் காந்தியை பா.ஜ.க. கடுமையாக சாடியுள்ளது.

காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பரூக் அப்துல்லா அண்மையில் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், காஷ்மீரில் சீனாவின் ஆதரவுடன் மீண்டும் சிறப்பு சட்டப்பிரிவு 370 அமலுக்கு வரும் என தெரிவித்து இருந்தார். இதற்கு பா.ஜ.க. கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:

இரண்டு பேரும் சீனாவுக்கு போய் குடியேறுங்க… பருக் அப்துல்லா, ராகுல் காந்தியை சாடிய பா.ஜ.க.
பரூக் அப்துல்லா

ஜனநாயக செயல்முறை பற்றி உங்களுக்கு இடஒதுக்கீடு இருந்தால் அதை பற்றி பேச உங்களுக்கு அனுமதி உண்டு. ஆனால் எதையாவது மீண்டும் நிலைநிறுத்த வேறொரு நாட்டோடு நீங்கள் கை கோர்த்தால் அது கண்டிக்கதக்கது. இதுவும் தேச துரோகம்தான்.

இரண்டு பேரும் சீனாவுக்கு போய் குடியேறுங்க… பருக் அப்துல்லா, ராகுல் காந்தியை சாடிய பா.ஜ.க.
ராகுல் காந்தி

ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கைகளை பார்த்தால், பரூக் அப்துல்லாவும், ராகுல் காந்தியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தான் என்பதை புரிந்து கொள்வீர்கள். பிரதமர் மோடியின் மீதான வெறுப்பு அவர்களை நாட்டை வெறுக்கும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது. அவர்களுக்கு (பரூக் அப்துல்லா, ராகுல் காந்தி) உகந்ததாக இருக்கும் என்றால் சீனாவில் போய் குடியேறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.