குதிரை உடல் முழுவதும் பிஜேபி வர்ணம் -சின்னம்: மத்திய அமைச்சரை விளாசி எடுத்த மேனகாகாந்தி

 

குதிரை உடல் முழுவதும் பிஜேபி வர்ணம் -சின்னம்:  மத்திய  அமைச்சரை விளாசி எடுத்த  மேனகாகாந்தி

குதிரை உடல் முழுவதும் பிஜேபி நிறத்தில் வர்ணம் பூசி, பிஜேபியின் சின்னத்தை வரைந்து வைத்து, ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டதை கண்டித்து மேனகாகாந்தியின் பீப்பிள் பார் அனிமல்ஸ் (PFA) அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

குதிரை உடல் முழுவதும் பிஜேபி வர்ணம் -சின்னம்:  மத்திய  அமைச்சரை விளாசி எடுத்த  மேனகாகாந்தி

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு முதல்வராக இருப்பவர் சிவ்ராஜ் சிங் சவுகான். அம்மாநிலத்தின் இந்தூர் நகரில் நேற்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் ஜன் ஆசிர்வாத் யாத்திரை நடைபெற்றது. இந்த யாத்திரையில் ஒரு குதிரை உடல் முழுவதும் பிஜேபி நிறத்தில் வர்ணம் பூசி, பிஜேபியின் சின்னத்தை வரைந்து வைத்து, ஊர்வலமாக அழைத்து சென்றனர். முன்னாள் நகராட்சி கார்ப்பரேட்டர் ராமதாஸ் கார்க், யாத்திரையில் குதிரையை வாடகைக்குக் கொண்டு வந்து, இப்படி அழைத்து சென்றார்.

குதிரை ஆரஞ்சு மற்றும் பச்சை நிறத்தில் தாமரை சின்னத்துடன் இருந்தது, இது பாஜக சின்னம். கட்சியின் பெயர் குதிரையின் உடலில் செங்குத்தாக எழுதப்பட்டது. அதன் கழுத்தில் அச்சிடப்பட்ட பிஜேபி கொடியும் கட்டப்பட்டிருந்தது.

குதிரை உடல் முழுவதும் பிஜேபி வர்ணம் -சின்னம்:  மத்திய  அமைச்சரை விளாசி எடுத்த  மேனகாகாந்தி

குதிரையின் உடல் முழுவதும் வர்ணம் பூசி இப்படி கொடுமைப்படுத்தியிருப்பது கண்டு மேனகா காந்தியின் ‘பீப்பிள் பார் அனிமல்ஸ்’ (PFA)விலங்குகள் நல அமைப்பு இந்துார் கிளை நிர்வாகி, சன்யோகீதாகஞ்ச் கொதித்தெழுந்து போலீசில் புகாரளித்துள்ளார்.

விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், 1960 இன் கீழ் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய என்று அவர் புகாரில் தெரிவித் திருக்கிறார். மேலும், மத்திய அமைச்சருக்கு எதிராக கடும் கண்டனங்களை எழுப்பி, ஒரு அமைச்சரே இப்படி நடந்துகொள்ளலாமா, இதை தடுத்திருக்க வேண்டாமா என்று விளாசி எடுத்திருக்கிறார்.