“மாணவிகள் குடிக்கின்ற காட்சி; தேவையா ஜெயலலிதா ஆட்சி?” – உலாவரும் பாஜகவின் பழைய ட்வீட்

 

“மாணவிகள் குடிக்கின்ற காட்சி; தேவையா ஜெயலலிதா ஆட்சி?” – உலாவரும் பாஜகவின் பழைய ட்வீட்

ஆட்சியில் இருக்கும் கட்சியை வக்கனையாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் முன்னவர்களை விட கொடூரமான ஆட்சிபுரிந்து அவர்களிடம் வாங்கி கெட்டிக்கொள்வார்கள். இது ஒரு சுழல் கடிகாரம் போல ஒவ்வொரு ஐந்தாண்டு அரசியலில் அரங்கேறும் நிகழ்வு. இது ஒரு ஆர்ட் என்றால் அதன் ஆர்டிஸ்ட் பாஜக தான். காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது எதையெல்லாம் எதிர்தார்களோ அதையெல்லாம் கொண்டுவந்தார்கள். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அப்போதே மோடி கொந்தளித்து ட்வீட் செய்திருக்கிறார். மற்ற தலைவர்களும் விதிவிலக்கல்ல. இந்த ட்வீட்கள் தற்போது சுற்றலில் வந்து பாஜகவுக்குப் பெரும் தலைவலியாக மாறியிருக்கின்றன.

“மாணவிகள் குடிக்கின்ற காட்சி; தேவையா ஜெயலலிதா ஆட்சி?” – உலாவரும் பாஜகவின் பழைய ட்வீட்

அந்த வரிசையில் தமிழக பாஜகவின் ட்வீட் இணைந்திருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை விமர்சிக்கும் வண்ணம் அந்த ட்வீட் இருக்கிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்த வரையில் அவர் மத்திய அரசை எதிர்த்தே வந்தார். ஒரு தேர்தல் மேடையில் கூட மோடியா இந்த லேடியா என்று கேட்டு கெத்து காட்டினார். அவர் உயிரோடு இருந்தவரை பாஜக அதிமுகவிடம் வாலாட்ட முடியவில்லை என்பது நாமே கண்கண்ட உதாரணம். அவர் இறந்த பிறகு என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்து தற்போது யாருடையை தலைமையில் அதிமுக இயங்குகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

டாஸ்மாக் எதிர்ப்பு குறித்த வாசகம் இடம்பெற்றுள்ள ட்வீட்டில், தேவையா ஜெயலலிதா ஆட்சி என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ட்வீட்டின் கடைசியில் இடம்பெற்றிருக்கும் மோடியின் கரம் பிடிப்போம் என்ற வாசகம் அப்போது புரியவில்லை இப்போது புரிகிறது என நெட்டிசன்கள் கலாய்த்துவருகின்றனர். எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் மோடியின் கரத்தைப் பிடித்ததை மறைமுகமாக அவர்கள் கிண்டலடிக்கிறார்கள்.