புதுச்சேரியில் பாஜக-என்ஆர் காங்கிரஸ் கட்சி இடையே மீண்டும் மோதல்

 

புதுச்சேரியில் பாஜக-என்ஆர் காங்கிரஸ் கட்சி இடையே மீண்டும் மோதல்

புதுச்சேரி பாஜக சார்பில் அமைச்சர் பட்டியல் கொடுப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்துவருகிறது.

புதுச்சேரியில் பாஜக-என்ஆர் காங்கிரஸ் கட்சி இடையே மீண்டும் மோதல்

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்., – பா.ஜ., கூட்டணி 16 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து முதல்வராக ரங்கசாமி கடந்த மாதம் ஏழாம் தேதி பதவியேற்றார். இரு கட்சிகளுக்கும் இடையே சபாநாயகர் பதவி, அமைச்சர் பதவிகளை பங்கிட்டுக் கொள்வதில், ஒரு மாதமாக இழுபறி நீடித்தது. இரு கட்சி பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, முதல்வர் ரங்கசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்பு கொண்டு பேசினார். அதையடுத்து, பதவி பங்கீட்டில் சுமூக தீர்வு ஏற்பட்டது. அதில், என்.ஆர். காங்., கட்சிக்கு 3 அமைச்சர் பதவி, துணை சபாநாயகர் பதவியும், பா.ஜ.வுக்கு சபாநாயகர், 2 அமைச்சர் பதவிகள் வழங்க உடன்பாடு ஏற்பட்டது.

புதுச்சேரியில் பாஜக-என்ஆர் காங்கிரஸ் கட்சி இடையே மீண்டும் மோதல்

பா.ஜ.கவில் தேர்ந்தெடுக்கப்பட்ட எல்.ஏ.க்கள் 6 பேருக்கு 3 நியமன எம்.எல்.ஏ.,க்கள், 3 சுயேட்சை எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு உள்ளது. இவர்களில் யாருக்கு அமைச்சர் பதவி, சபாநாயகர் பதவி கொடுப்பது என்பது தொடர்பாக, கட்சி மேலிட பொறுப்பாளர்கள் இரு நாட்களாக ஆலோசித்து வருகின்றனர். பாஜக பாராளுமன்ற உறுப்பினர் ராஜுவ் சந்திரசேகர் பாஜக சார்பாக திலாஸ்பேட்டையில் உள்ள முதலமைச்சர் வீட்டில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னரும் அமைச்சர் பட்டியல் வெளியாகவில்லை. மேலும் பாஜக தலைவர்கள் இடையே பதவி குறித்து முடிவு எட்டப்படாததால் இந்த பேச்சுவார்த்தையானது மேலும் நீடிக்க வாய்ப்பு உள்ளது.