புதுச்சேரியில் அதிரடி திருப்பம்…பாஜக-என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்? – டெல்லி மேலிடம் போட்ட புது உத்தரவு!

புதுச்சேரியில் அதிரடி திருப்பம்…பாஜக-என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்? – டெல்லி மேலிடம் போட்ட புது உத்தரவு!

புதுச்சேரியோடு தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. மற்ற மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஆட்சியமைக்கப்பட்டது. அங்கே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை புதிய அரசுகள் விரைவுப்படுத்தியுள்ளன. ஆனால் புதுச்சேரியில் புதிய அரசு இன்னும் முழுவதுமாகப் பொறுப்பேற்கவில்லை. என்.ஆர். காங்கிரஸ் தலைவரான ரங்கசாமி மட்டுமே முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இன்னும் அமைச்சரவை பட்டியல் வெளியாகவில்லை. இதனால் கொரோனா பணிகள் முடங்கி புதுச்சேரி மக்கள் இன்னலுக்குள்ளாவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

புதுச்சேரியில் அதிரடி திருப்பம்…பாஜக-என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்? – டெல்லி மேலிடம் போட்ட புது உத்தரவு!

பாஜக-என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் அமைச்சரவை ஒதுக்கீடு குறித்து இறுதி முடிவு எட்டப்படாமல் இருப்பதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. பாஜக தரப்பில் மூன்று அமைச்சர்கள் பதவியும் சபாநாயகர் பதவியும் கேட்கிறார்கள். ஆனால் இரண்டு அமைச்சர்களுடன் துணை சபாநாயகர் பதவி மட்டுமே கொடுக்க முடியும் என ரங்கசாமி கறார் காட்டுகிறார். தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் பலரும் டெல்லி மேலிடம் வரை முறையிட்டும் ரங்கசாமி செவிசாய்க்கவில்லை. இதனால் அதிருப்தியான எம்எல்ஏக்கள் வெளிப்படையாக பேச தொடங்கியுள்ளனர்.

புதுச்சேரியில் அதிரடி திருப்பம்…பாஜக-என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்? – டெல்லி மேலிடம் போட்ட புது உத்தரவு!

ஊரடங்கு அமலில் இருக்கும் சமயத்தில் அமைச்சர் பதவி கேட்டு சாய் சரவணன் எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் பாஜக அலுவலகத்தில் குவிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல பலரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக டெல்லி மேலிடம் புதிய உத்தரவு ஒன்றை போட்டுள்ளது. ரங்கசாமி அழைத்தால் மட்டும் பேச்சுவார்த்தைக்கு செல்லுங்கள் என மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக பொதுவெளியில் யாரும் கருத்து சொல்ல கூடாது என்றும் எச்சரித்துள்ளது.