பா.ஜ.க-வில் தலைவர் பதவி வழங்காதது ஏன்? – அதிருப்தியை வெளிப்படுத்திய நயினார் நாகேந்திரன்

 

பா.ஜ.க-வில் தலைவர் பதவி வழங்காதது ஏன்? – அதிருப்தியை வெளிப்படுத்திய நயினார் நாகேந்திரன்

தனக்கு தமிழக பா.ஜ.க தலைவர் பதவி வழங்காதது காரணமாக அதிருப்தியில் இருப்பதாக நயினார் நாகேந்திரன் வெளிப்படையாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவர் பா.ஜ.க-வுக்கு சென்றார். அங்கு நீண்ட காலம் செயல்பட்டு வந்த அவர் கட்சித் தலைவர் பதவி கிடைக்கும் என்று காத்திருந்தார்.

பா.ஜ.க-வில் தலைவர் பதவி வழங்காதது ஏன்? – அதிருப்தியை வெளிப்படுத்திய நயினார் நாகேந்திரன்
ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில் எல்.முருகன் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். இது பா.ஜ.க தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. குறைந்தபட்சம் தனக்கு பொதுச் செயலாளர் பதவியாவது கிடைக்கும் என்று நயினார் நாகேந்திரன் காத்திருந்தார். ஆனால் அவருக்கு அதிகாரம் இல்லாத துணைத் தலைவர் பதவியே கிடைத்தது.

பா.ஜ.க-வில் தலைவர் பதவி வழங்காதது ஏன்? – அதிருப்தியை வெளிப்படுத்திய நயினார் நாகேந்திரன்
இதனால் அவர் அதிருப்தியில் உள்ளார் என்றும், கட்சியை விட்டு வெளியேறி அ.தி.மு.க பக்கம் சாயப் போவதாக செய்தி வெளியானது. இது பற்றி நம்முடைய டாப் தமிழ் நியூசில் கூட செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் தனக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதனால் தனிமைப்படுத்திக் கொண்டேன் என்று அவர் அறிவித்தார். இது பற்றி தனியார் தொலைக்காட்சி அவரிடம் கருத்து கேட்டது. அப்போது தான் அதிருப்தியில் இருக்கிறேன் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

http://

அந்த பேட்டியில், “பா.ஜ.க-வில் மன வருத்தத்துடன் நீடிக்கிறேன். தமிழிசைக்கு பிறகு தலைவர் பதவி எனக்கு வழங்கப்படும் என்று பேச்சு எழுந்தது. ஆனால் தலைவர் பதவி அளிக்கப்படவில்லை. தலைவர் பதவி வழங்கப்படாதது பற்றி வருத்தம் இல்லை.
அதே நேரத்தில் பொதுச் செயலாளர் பதவி கூட வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் அம்மாவுக்கு அடுத்தபடியாக இருந்தேன். தமிழ்நாட்டில் எனக்குத் தெரியாத குக்கிராமமே உள்ளது. எல்லா மாவட்டங்களும் என்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் இருந்தன. நான் உருவாக்கிய மந்திரிகளும் உள்ளனர். அப்படி இருக்கும்போது சீட் நானாக கேட்கவில்லை. சரியான தலைவர்கள் இல்லாத நிலையில் பொதுச் செயலாளர் பதவியலாவது போட்டிருக்கலாம். மன வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. அ.தி.மு.க, தி.மு.க செல்வது பற்றி யோசிக்கவில்லை. அடிக்கடி கட்சி மாறினால் சரியாக இருக்காது” என்றார்.