ராமர் கோயில் பூமி பூஜை.. என் பெயரை நீக்குங்க.. பிரதமர் மோடி சென்ற பிறகுதான் வருவேன்.. உமா பாரதி தகவல்

 

ராமர் கோயில் பூமி பூஜை.. என் பெயரை நீக்குங்க.. பிரதமர் மோடி சென்ற பிறகுதான் வருவேன்.. உமா பாரதி தகவல்

ராமர் கோயில் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை காலை நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில், அந்த விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்தர பிரதேச பா.ஜ.க. தலைவர்கள் சிலருக்கு கொரோனா என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பா.ஜ.க. துணை தலைவர் உமா பாரதி, நாளை அயோத்தி வந்து விடுவேன் ஆனால் பூமி பூஜையில் கலந்து கொள்ள மாட்டேன். பிரதமர் மோடி சென்ற பிறகு ராம் லாலாவில் தரிசனம் மேற்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

ராமர் கோயில் பூமி பூஜை.. என் பெயரை நீக்குங்க.. பிரதமர் மோடி சென்ற பிறகுதான் வருவேன்.. உமா பாரதி தகவல்

உமா பாரதி இது தொடர்பாக டிவிட்டரில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சில இதர உத்தர பிரதேச பா.ஜ.க. தலைவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக வெளியான செய்தியை கேட்டது முதல், அடிக்கல் நாட்டு விழாவுக்காக அயோத்தி வரும் பிரதமர் மோடி மற்றும் மக்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட்டேன். பூமி பூஜை நடைபெறும்போது நான் சரயு நதியில் இருப்பேன் என ராம் ஜென்மபூமி நியாஸ் அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டேன். இன்று போபாலில் இருந்து அயோத்திக்கு கிளம்புகிறேன்.

ராமர் கோயில் பூமி பூஜை.. என் பெயரை நீக்குங்க.. பிரதமர் மோடி சென்ற பிறகுதான் வருவேன்.. உமா பாரதி தகவல்

நான் அயோத்தியை அடையும் நேரத்தில் வரும் வழியில் கொரோனா வைரஸ் தொற்று உள்ள எந்தவொரு நபரையும் தெரியாமல் சந்திக்கலாம். இது போன்ற சூழ்நிலையில், பிரதமர் மோடி மற்றும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் இதர மக்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். பிரதமர் மோடி மற்றும் மற்றவர்கள் சென்ற பிறகு ராம் லாலா தரிசனம் செய்கிறேன். ராமா கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்கான அழைப்பாளர்கள் பட்டியலில் எனது பெயரை நீக்ககும்படி ராம் ஜென்மபூமி நியாஸ் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் மூத்த அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டேன் என பதிவு செய்து உள்ளார்