மேற்கு வங்கத்தில் காட்டாட்சி நடப்பதற்கு பா.ஜ.க எம்.எல்.ஏ மர்ம மரணம் சாட்சி! – ஜே.பி.நட்டா சொல்கிறார்

மேற்கு வங்கத்தில் காட்டாட்சி நடப்பதற்கு பா.ஜ.க எம்.எல்.ஏ மர்ம மரணம் சாட்சி! – ஜே.பி.நட்டா சொல்கிறார்

மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு தோல்வியடைந்துவிட்டதையும் அங்கு காட்டாட்சி நடக்கிறது என்பதற்கும் பா.ஜ.க எம்.எல்.ஏ-வின் மர்ம மரணமே சான்று என்று பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் காட்டாட்சி நடப்பதற்கு பா.ஜ.க எம்.எல்.ஏ மர்ம மரணம் சாட்சி! – ஜே.பி.நட்டா சொல்கிறார்மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ தேபேந்திரநாத் ரே, அவருடைய கிராம வீட்டுக்கு அருகே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கிவிட்டிருக்கலாம் என்று கிராம மக்கள் மற்றும் பா.ஜ.க-வினர் கூறுகின்றனர்.

மேற்கு வங்கத்தில் காட்டாட்சி நடப்பதற்கு பா.ஜ.க எம்.எல்.ஏ மர்ம மரணம் சாட்சி! – ஜே.பி.நட்டா சொல்கிறார்
இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று சரியாக தெரியாத நிலையில், பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மேற்கு வங்க அரசைக் குறைகூறி ட்விட்டரில் பதிவ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மேற்கு வங்க மாநிலம் ஹேம்தாபாத் பா.ஜ.க எம்.எல்.ஏ தேபேந்திரநாத் ரே மர்மமான முறையில் இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மம்தா அரசின் சட்டம் ஒழுங்கு தோல்வியையும் காட்டாட்சி அங்கு நடப்பதையும் இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது. மேற்கு வங்க மக்கள் இதுபோன்ற செயல்களை வருங்காலத்தில் மன்னிக்கமாட்டார்கள். மிகக் கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்” என்று கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் காட்டாட்சி நடப்பதற்கு பா.ஜ.க எம்.எல்.ஏ மர்ம மரணம் சாட்சி! – ஜே.பி.நட்டா சொல்கிறார்
மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று பா.ஜ.க முயற்சி செய்து வருகிறது. அங்கு திரிணாமுல் காங்கிரஸ் பற்றி தொடர்ந்து பா.ஜ.க தவறான பிரசாரம் செய்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் எம்.எல்.ஏ-வின் மரணத்தை பா.ஜ.க அரசியல் பயணத்துக்கு பயன்படுத்துகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.