“கூட்டணிக்குள் சிண்டு முடியும் வேலைய நிறுத்திகோங்க” – ரவிக்குமார் எம்பிக்கு பாஜக எச்சரிக்கை!

 

“கூட்டணிக்குள் சிண்டு முடியும் வேலைய நிறுத்திகோங்க” – ரவிக்குமார் எம்பிக்கு பாஜக எச்சரிக்கை!

தமிழ்நாட்டோடு சேர்த்து புதுச்சேரிக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. புதுச்சேரியில் தேர்தல் முடிவுகள் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணிக்குச் சாதகமாக அமைந்தன. அதன்படி மே 7ஆம் தேதி முதலமைச்சராக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவியேற்றுக் கொண்டார். ஆனால் அவருக்கு திடீரென்று கொரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தற்போது குணமடைந்து தனிமைப்படுத்தலில் இருக்கிறார். இன்னும் புதுச்சேரியில் ஆட்சியமைக்கவில்லை. புதிய அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் பதவியேற்றுக் கொள்ளவில்லை.

“கூட்டணிக்குள் சிண்டு முடியும் வேலைய நிறுத்திகோங்க” – ரவிக்குமார் எம்பிக்கு பாஜக எச்சரிக்கை!

கூட்டணிக்குள் பிரச்சினை இருப்பதால் தான் இதற்குக் காரணம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக ட்வீட் செய்த ரவிக்குமார் எம்பி, “புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவியேற்கவிடாமல் தடுக்கும் பாஜகவைக் கண்டிக்கிறேன்! அங்கே அதிகரித்துவரும் கொரோனா மரணங்களுக்கு பாஜகவே பொறுப்பேற்கவேண்டும். மாண்புமிகு முதல்வர் என்.ரங்கசாமி இனியும் பொறுமை காத்தால் இந்தப் பழியெல்லாம் அவர் தலையில்தான் விழும்” என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது இதை மறுத்து புதுச்சேரி பாஜக சட்டப்பேரவை தலைவர் நமச்சிவாயம் அறிக்கை விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், “புதுச்சேரி முதல்வராகப் பதவியேற்ற ரங்கசாமி கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காரணத்தினால்தான் அமைச்சர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் பொறுப்பேற்க முடியவில்லை என்பதைப் புதுச்சேரி மக்கள் அனைவரும் அறிவர். சமூகப் பொறுப்புள்ள எழுத்தாளராக இருக்கின்ற ரவிக்குமார் சம்பந்தமே இல்லாமல் பாஜக மீது அபாண்டமாக வீண் பழி சுமத்துவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

“கூட்டணிக்குள் சிண்டு முடியும் வேலைய நிறுத்திகோங்க” – ரவிக்குமார் எம்பிக்கு பாஜக எச்சரிக்கை!

புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எவ்வளவு தடை வந்தாலும் அதைத் தகர்த்தெறிந்து நல்லாட்சி தரும். முதல்வர் சகஜ நிலைமைக்குத் திரும்பியவுடன், பதவி ஏற்பு நடைபெறும். அதன் பிறகு அரசியல் உள்நோக்கத்தோடு பாஜகவை விமர்சிக்கும் ரவிக்குமார் உள்ளிட்டவர்களின் சுயரூபம் புதுச்சேரி மக்களுக்கு வெகுவிரைவில் புலப்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுக்குள் சிண்டு முடியும் வேலையை நிறுத்திக்கொண்டு கொரோனா எனும் கொடும் நோயினால் அவதிப்பட்டு வரும் மக்களுக்கு உதவி செய்வதில் அக்கறை காட்டுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.