“சி.டி.ரவியின் கருத்து தான் எங்கள் கருத்தும்” – எல்.முருகன் பேட்டி!

 

“சி.டி.ரவியின் கருத்து தான் எங்கள் கருத்தும்” – எல்.முருகன் பேட்டி!

முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் சி.டி.ரவியின் கருத்து தான் எண்களின் கருத்து என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

“சி.டி.ரவியின் கருத்து தான் எங்கள் கருத்தும்” – எல்.முருகன் பேட்டி!

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என்ற பாஜகவின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவியின் கருத்து தான் எங்களின் கருத்தும். தைப்பூசத் திருநாள் அன்று பழனி சென்று காவடி எடுக்க உள்ளேன். விரதம் இருக்க போகிறேன் என்று கூறினார். மேலும், திமுக கூட்டணி இன்னும் உறுதியாகவில்லை; அதில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்றும்விமர்சித்தார் .

“சி.டி.ரவியின் கருத்து தான் எங்கள் கருத்தும்” – எல்.முருகன் பேட்டி!

வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்திருக்கும் அதிமுக – பாஜக இடையே முதல்வர் வேட்பாளர் பிரச்னை எழுந்தது. எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளர் என்றாலும் அதனை பாஜக தான் அறிவிக்கும் என பாஜகவினர் திட்டவட்டமாக கூறி வந்தனர். இதற்கு அதிமுக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. கூட்டணி அமைத்திருக்கும் கட்சிகளுக்குள் உட்பூசல் நிலவுவது குறித்து விமர்சனங்களும் எழுந்தன.

இந்த நிலையில் தான், அதிமுகவே முதல்வர் வேட்பாளரை தீர்மானிக்கும் என சி.டி.ரவி தெரிவித்தார். பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் மிகப்பெரிய கட்சி இது தான் என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.