‘கிசான் திட்டத்தில் முறைகேடு’ சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும்: எல்.முருகன்

 

‘கிசான் திட்டத்தில் முறைகேடு’ சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும்: எல்.முருகன்

பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு பற்றி சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு சிறு குறு கடன் வழங்கும் விதமாக மத்திய அரசு அறிமுகப்படுத்திய கிசான் திட்டத்தில் நாடு முழுவதும் லட்ச கணக்கான விவசாயிகள் பயனடைந்துள்ளனர். தமிழகத்திலும் ஆயிரக் கணக்கான விவசாயிகள் பயனடைந்திருக்கும் நிலையில், பல மாவட்டங்களில் முறைகேடு நடந்திருப்பதாக பிரபல செய்தி நிறுவனத்தின் கள ஆய்வில் தெரிய வந்தது. இதனையடுத்து மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேளாண்துறை அமைச்சர் உத்தரவிட்டார்.

‘கிசான் திட்டத்தில் முறைகேடு’ சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும்: எல்.முருகன்

அதன் படி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு முறைகேடு நடந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்தனர். அப்போது கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கோடிக்கணக்கில் பண மோசடி நடந்தது அம்பலமானது. கிசான் திட்டத்தில் மோசடி செய்தவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் திரும்பப்பெறப்படும் என தெரிவிக்கப்பட்டதன் படி தற்போது பணம் திருப்பி வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கிசான் திட்ட மோசடி குறித்து பேசிய தமிழக பாஜக எல்.முருகன், முறைகேடு குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும், விசாரணையை தீவிரப்படுத்தி உண்மையான விவசாயிகளுக்கு உதவித் தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.