சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும்.. மாநிலங்களவையில் பா.ஜ.க. பெண் எம்.பி. கோரிக்கை

 

சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும்.. மாநிலங்களவையில் பா.ஜ.க. பெண் எம்.பி. கோரிக்கை

பெண்கள் தினம் கொண்டாடுவது போல் சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று மாநிலங்களவையில் பா.ஜ.க. பெண் எம்.பி. சோனல் மான்சிங் கோரிக்கை விடுத்தார்.

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று பெண் எம்.பி.க்கள் பேசினர். அப்போது நடன கலைஞரும், பா.ஜ.க. எம்.பி.யுமான சோனல் மான்சிங் பேசுகையில், சர்வதேச ஆண்கள் கொண்டாடப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். சோனல் மான்சிங் மாநிலங்களவையில் பேசியதாவது: நான் எங்கோ படித்த இந்த மேற்கோளை படிக்க விரும்புகிறேன்.

சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும்.. மாநிலங்களவையில் பா.ஜ.க. பெண் எம்.பி. கோரிக்கை
சர்வதேச பெண்கள் தினம்

ஒரு பெண்ணாக இருப்பது கடினம். நீங்கள் மனிதனை போல் சிந்திக்க வேண்டும். ஒரு பெண்ணை போல் நடந்து கொள்ள வேண்டும். ஒரு இளம் பெண் போல் இருக்க வேண்டும். குதிரை போல் வேலை செய்ய வேண்டும். பெண்களுக்கு முன்பை விட உரிமைகள் அதிகமாக உள்ளது. ஆனால் இன்னும் போதுமான உரிமைகள் இல்லை.

சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும்.. மாநிலங்களவையில் பா.ஜ.க. பெண் எம்.பி. கோரிக்கை
சர்வதேச ஆண்கள் தினம்

சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று நான் கோருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று சோனல் மான்சிங் கோரிக்கை விடுத்தவுடன், அவையில் கலகலப்பாக சிரித்தனர். உலகம் முழுவதும் நவம்பர் 19ம் தேதியன்று சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் அப்படியொரு தினம் இருப்பது பல ஆண்களுக்கு தெரியாது.