காங்கிரஸ் தலைமை எனக்கு துணைமுதல்வர் பதவி வழங்கியது ஆனால் நான் மறுத்து விட்டேன்.. சிந்தியா

 

காங்கிரஸ் தலைமை எனக்கு துணைமுதல்வர் பதவி வழங்கியது ஆனால் நான் மறுத்து விட்டேன்.. சிந்தியா

மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 27 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அடுத்த சில மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் 16 தொகுதிகள் குவாலியர்-சம்பல் மண்டலத்தில் உள்ளது. இடைத்தேர்தலை குறிவைத்து அந்த பகுதியில் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. குவாலியரில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய 3 நாள் பா.ஜ.க. உறுப்பினர் வரவேற்பு விழா நேற்றுடன் முடிவடைந்தது. அதில் கலந்து கொண்ட பா.ஜ.க. எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியா பேசுகையில் கூறியதாவது: காங்கிரஸ் தலைமை எனக்கு துணை முதல்வர் பதவி வழங்குவதாக கூறியது ஆனால் அதற்கு பதிலாக மக்களுக்காக பணியாற்ற முடிவு செய்தேன்.

காங்கிரஸ் தலைமை எனக்கு துணைமுதல்வர் பதவி வழங்கியது ஆனால் நான் மறுத்து விட்டேன்.. சிந்தியா
ஜோதிராதித்ய சிந்தியா

கமல் நாத் மற்றும் திக்விஜய சிங்கும் காங்கிரஸ் அரசை 15 மாதங்களில் அழித்து விடுவார்கள் என நினைத்தேன். மாநிலத்தில் ஆட்சிக்கு வருவதற்காக 10 நாட்களில் விவசாய கடனை தள்ளுபடி செய்வோம் போன்ற பொய்யான வாக்குறுதிகளுடன் மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்தது. மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் 10 நாட்களில் ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடனை தள்ளுபடி செய்யப்படும், செய்ய தவறினால் 11வது முதல்வர் பதவி விலகுவார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி கொடுத்தார். மாநிலத்தில் ஆட்சிக்கு வருவதற்காக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைமை எனக்கு துணைமுதல்வர் பதவி வழங்கியது ஆனால் நான் மறுத்து விட்டேன்.. சிந்தியா
கமல் நாத், திக்விஜய சிங்

மத்திய பிரதேச. காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த உட்கட்சி சண்டையால், 18 ஆண்டுகளாக அந்த கட்சியின் தீவிர விசுவாசியாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா அந்த கட்சியிலிருந்து விலகி தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேருடன் கடந்த மார்ச் மாதத்தில் பா.ஜ.க.வில் ஐக்கியமானார். இதனால் அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. பா.ஜ.க. மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பா.ஜ.க. வழங்கியது மேலும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு மாநிலத்தில் அமைச்சர் பதவியும் வழங்கியது.