பாகிஸ்தானை காட்டிலும் இங்கு அதிகம்.. முஸ்லிம்களின் சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும்.. பா.ஜ.க. எம்.பி.

பாகிஸ்தானை காட்டிலும் இங்கு அதிகம்.. முஸ்லிம்களின் சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும்.. பா.ஜ.க. எம்.பி.

பாகிஸ்தானை காட்டிலும் நம் நாட்டில் முஸ்லிம்கள் அதிகம். ஆகையால் அவர்களின் சிறுபான்மை அந்தஸ்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று சாக்ஷி மஹராஜ் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், உன்னோவ் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான சாக்ஷி மஹராஜ் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பெயர் போனவர். உன்னோவ் தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட சாக்ஷி மஹராஜ் பேசுகையில் கூறியதாவது: பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவில் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர். ஆகையால் முஸ்லிம்களின் சிறுபான்மையினர் அந்தஸ்தை உடனடியாக நீக்க வேண்டும்.

பாகிஸ்தானை காட்டிலும் இங்கு அதிகம்.. முஸ்லிம்களின் சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும்.. பா.ஜ.க. எம்.பி.
சாக்ஷி மஹராஜ்

முஸ்லிம்கள் இனி தங்களை இந்துக்களின் இளைய உடன்பிறப்புகளாக கருதி அவர்களுடன் நாட்டில் வாழ வேண்டும். மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்த விரைவில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும். 2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு இழக்க நேரிடும். வேளாண் சட்டங்கள் குறித்து பேச மத்திய அரசு தயாராக உள்ளது.

பாகிஸ்தானை காட்டிலும் இங்கு அதிகம்.. முஸ்லிம்களின் சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும்.. பா.ஜ.க. எம்.பி.
காங்கிரஸ்

ராமர் கோயில் போலவே வேளாண் மசோதாக்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரசும், மற்ற கட்சிகளும் மேல்முறையீடு செய்ய வேண்டும். ஆனால் அதற்கு மாறாக அவர்கள் அப்பாவி விவசாயிகளின் தோள்களில் இருந்து துப்பாக்கியால் சுடுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.