நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை கொன்றதுதான் காங்கிரஸ்தான்… பா.ஜ.க. எம்.பி. பகீர் குற்றச்சாட்டு

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை கொன்றதுதான் காங்கிரஸ்தான்… பா.ஜ.க. எம்.பி. பகீர் குற்றச்சாட்டு

காங்கிரஸ்தான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை கொன்றது என்று பா.ஜ.க. எம்.பி. சாக்ஷி மஹாராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டின் சிறந்த சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய தலைவர்களில் ஒருவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். கடந்த சனிக்கிழமையன்று நேதாஜியின் 125வது பிறந்த நாள் நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்றது. உத்தர பிரதேசத்தில் உன்னாவ் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. எம்.பி. சாக்ஷி மஹாராஜ் கலந்து கொண்டார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை கொன்றதுதான் காங்கிரஸ்தான்… பா.ஜ.க. எம்.பி. பகீர் குற்றச்சாட்டு
சாக்ஷி மஹாராஜ்

சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவதில் பெயர் போனவரான சாக்ஷி மஹாராஜ் அந்த கூட்டத்திலும ஒரு பகீர் குற்றச்சாட்டை கூறினார். பா.ஜ.க. எம்.பி. சாக்ஷி மஹாராஜ் பேசுகையில், எனது குற்றச்சாட்டு என்னவென்றால், காங்கிரஸ்தான் சுபாஸ் சந்திரபோஸை கொன்றது. மகாத்மா காந்தியோ அல்லது பண்டிட் நேருவோ அவரது புகழ் முன் நிற்க முடியாது என்று தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை கொன்றதுதான் காங்கிரஸ்தான்… பா.ஜ.க. எம்.பி. பகீர் குற்றச்சாட்டு
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

1945 ஆகஸ்ட் 18ம் தேதியன்று தைபியில் நடந்த விமான விபத்தில் நேதாஜி கொல்லப்பட்டார் என்ற தகவல்களை ஆசாத் ஹிந்த் பாஜில் இருந்து அவரது ஆதரவாளர்கள் உள்பட பலர் இந்த விமான விபத்து கோட்பாட்டை ஒரு போதும் நம்பவில்லை. இருப்பினும், அந்த விபத்தில் நேதாஜி இறந்து விட்டதை 2017ல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலில் நேதாஜியின் இறப்பை மத்திய அரசு உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.