இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பசு சாணத்தை மத்திய அரசு வாங்க வேண்டும்.. பா.ஜ.க. எம்.பி. பரிந்துரை

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பசு சாணத்தை மத்திய அரசு வாங்க வேண்டும்.. பா.ஜ.க. எம்.பி. பரிந்துரை

இயற்கை விவசாயத்துக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்பதால், நாடு முழுவதும் பசு சாணத்தை விலைக்கு வாங்க வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. பரிந்துரை செய்துள்ளார்.

வேளாண்மை தொடர்பான நாடாளுமன்ற குழுவின் இரண்டு நாள் கூட்டம் கடந்த திங்கட்கிழமை தொடங்கி நேற்று முன்தினம் முடிவடைந்தது. பட்ஜெட்டில் வேளாண் அமைச்சகம் தொடர்பான மானிங்களுக்கான கோரிக்கை குறித்து அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் வேளாண் செயலாளர் உள்பட அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பசு சாணத்தை மத்திய அரசு வாங்க வேண்டும்.. பா.ஜ.க. எம்.பி. பரிந்துரை
பசுக்கள்

அந்த கூட்டத்தில் அந்த குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பா.ஜ.க. எம்.பி. பேசுகையில் கூறியதாவது: நாடு முழுவதும் பசு சாணத்தை அரசாங்கம் வாங்கி தொடங்கினால், இயற்கை விவசாயத்துக்கு மிகப்பெரிய ஊக்கமளிக்கும். மேலும் தெரு விலங்குகளையும் அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியும். பா.ஜ.க. எம்.பி.யின் இந்த பரிந்துரையை குழுவில் இடம் பெற்றுள்ள பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்ததாகவும் தகவல்.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பசு சாணத்தை மத்திய அரசு வாங்க வேண்டும்.. பா.ஜ.க. எம்.பி. பரிந்துரை
பூபேஷ் பாகல்

சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் அரசு, அம்மாநிலத்தில் கால்நடை வளர்ப்பை வர்த்தக ரீதியாக லாபகரமாக்க, கால்நடைகள் திறந்த மேய்ச்சலை தடுக்க, தெருவில் மாடுகள் சுற்றுவதால் ஏற்படும் பிரச்சினை தீர்க்க மற்றும் சுற்றுப்புறச்சூழலை பாதுகாப்பதற்காக கோதன் நியாயே யோஜானா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின்கீழ் சத்தீஸ்கர் அரசு, கிலோ ரூ.2 என்ற விலையில் விலங்கு (பசு) சாணத்தை வாங்கி வருகிறது.