தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் வாக்கு வங்கி அரசியல் செய்கிறார்… பா.ஜ.க. குற்றச்சாட்டு..

தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் வாக்கு வங்கி அரசியல் செய்கிறார்… பா.ஜ.க. குற்றச்சாட்டு..

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வாக்கு வங்கி அரசியல் செய்கிறார் என பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

தெலங்கானாவில் பழைய தலைமை செயலகம் இடிக்கப்பட்டபோது 2 மசூதிகளும், கோயிலும் இடிக்கப்பட்டது. இது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், தெலங்கானா தலைமை செயலகத்தில் இடிக்கப்பட்ட 2 மசூதிகளை மீண்டும் கட்டுவது தொடர்பாக முஸ்லிம் தலைவர்களை சந்தித்து பேசினார். தலைமை செயலகத்தில் கோயிலும் இடிக்கப்பட்டது. ஆனால் அதனை மறுபடியும் கட்டுவது தொடர்பாக இந்து தலைவர்களை யாரையும் அழைத்து சந்திரசேகர ராவ் பேசவில்லை. இதனை சுட்டிக்காட்டி முதல்வர் சந்திரசேகர் ராவ் வாக்கு வங்கி அரசியல் செய்கிறார் என பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் வாக்கு வங்கி அரசியல் செய்கிறார்… பா.ஜ.க. குற்றச்சாட்டு..
தெலங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ்

இது தொடர்பாக பா.ஜ.க. மேலவை உறுப்பினர் ராமசந்திர ராவ் கூறியதாவது: நேற்று முன்தினம் முஸ்லிம் பிரநிதிகளுடன் முதல்வர் சந்திப்பு நடத்தினார். ஆனால் அப்போது இந்து கோயிலும் இடிக்கப்பட்டது, இந்து பிரநிதிகள் அல்லது கோயில் குழுவையை மறுகட்டுமானம் தொடர்பாக அவர் அழைத்து பேசவில்லை. இது ஒரு வாக்கு வங்கி அரசியல் மட்டுமே. அதிகாரிகளின் கூற்றுப்படி அது தற்செயலாக (கோயில் இடிப்பு) நடந்தது. அப்படியானால் அவர்கள் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா?

தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் வாக்கு வங்கி அரசியல் செய்கிறார்… பா.ஜ.க. குற்றச்சாட்டு..
ராமசந்திர ராவ்

பழைய தெலங்கானா தலைமை செயலகத்தில் 3 மசூதிகளுடன் கோயிலும் இடிக்கப்பட்டது. அந்த சம்பவத்துக்கு பிறகு நாங்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால் மாநில அரசின் அழுத்தத்தால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்து தலைவர்கள் மற்றும் பூசாரிகள் சம்மதம் இல்லாமல் ஏன் கோயில் இடிக்கப்பட்டது?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.