மம்தா பானர்ஜியும் லங்கினியும் ஒன்னு… அகிலேஷ் யாதவும் அவுரங்கசீப்பும் ஒன்னு.. பா.ஜ.க. எம்.எம்.ஏ.வின் சர்ச்சை பேச்சு

மம்தா பானர்ஜியும் லங்கினியும் ஒன்னு… அகிலேஷ் யாதவும் அவுரங்கசீப்பும் ஒன்னு.. பா.ஜ.க. எம்.எம்.ஏ.வின் சர்ச்சை பேச்சு

மம்தா பானர்ஜியை ராட்சசியான லங்கினியுடனும், அகிலேஷ் யாதவை அவரங்கசீப்புடனும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் பாய்ரியா சட்டப்பேரவை தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சுரேந்திர சிங். இவர் மனதில் பட்டதை கொஞ்சமும் தயங்காமல் அதிரடியாக பேசக்கூடியவர். இதனால் பலமுறை சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். தற்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை ராட்சசியான லங்கினியுடன் ஒப்பிட்டு பேசியிருப்பது கடும் சர்ச்சையை கிளப்பயுள்ளது.

மம்தா பானர்ஜியும் லங்கினியும் ஒன்னு… அகிலேஷ் யாதவும் அவுரங்கசீப்பும் ஒன்னு.. பா.ஜ.க. எம்.எம்.ஏ.வின் சர்ச்சை பேச்சு
பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேந்திர சிங்

இந்துக்களின் புராண காவியமான ராமாயணத்தில் வரும் ராட்சசி லங்கினி. இலங்கை மன்னன் ராவணனின் கோட்டை காவல் காப்பவளாக லங்கினி ராமாணயத்தில் இடம் பெற்றுள்ளாள். சீதை தேடி இலங்கை வரும் அனுமனிடம் லங்கினி மோதி தோற்பதாக கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு அம்மாநிலத்தில் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இதனால் முதல்வர் மம்தா பானர்ஜியை லங்கினியுடன் ஒப்பீட்டு பா.ஜ.க. எம்.ல்.ஏ. பேசியுள்ளார்.

மம்தா பானர்ஜியும் லங்கினியும் ஒன்னு… அகிலேஷ் யாதவும் அவுரங்கசீப்பும் ஒன்னு.. பா.ஜ.க. எம்.எம்.ஏ.வின் சர்ச்சை பேச்சு
அகிலேஷ் யாதவ்

முகலாய மன்னர் அவரங்கசீப் தனது தந்தை ஷாஜகானிடமிருந்து அரசர் பதவியை கைப்பற்றிய பிறகு, அவரை ஆக்ரா சிறையில் அடைத்தவர். உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், சமாஜ்வாடி கட்சியின் கட்டுப்பாட்டை தனது தந்தை மற்றும் சித்தாப்பாவிடமிருந்து கைப்பற்றினார். இதனால் அகிலேஷ் யாதவ் அவுரங்கசீப்பின் கலாச்சாரத்தை பின்பற்றுகிறார் என்று சுரேந்திர சிங் தெரிவித்தார்.