கண்ணியமாக நடந்து கொள்ள மகள்களுக்கு பெற்றோர்கள் கற்பித்தால் பாலியல் பலாத்காரங்களை நிறுத்தலாம்.. பா.ஜ.க. எம்.எல்.ஏ.

கண்ணியமாக நடந்து கொள்ள மகள்களுக்கு பெற்றோர்கள் கற்பித்தால் பாலியல் பலாத்காரங்களை நிறுத்தலாம்.. பா.ஜ.க. எம்.எல்.ஏ.

பெற்றோர்கள் தங்களது மகள்களுக்கு கண்ணியமாக நடந்து கொள்ள சொல்லி கொடுத்தால் பாலியல் பலாத்காரங்களை நிறுத்தலாம் என உ.பி. பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 19 வயது தலித் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தை மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் துயரத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் ஹத்ராஸ் சம்பவம் குறித்து உத்தர பிரதேச பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கண்ணியமாக நடந்து கொள்ள மகள்களுக்கு பெற்றோர்கள் கற்பித்தால் பாலியல் பலாத்காரங்களை நிறுத்தலாம்.. பா.ஜ.க. எம்.எல்.ஏ.
சுரேந்திர சிங்

உத்தர பிரதேசத்தின் பாலியா சட்டப்பேரவை தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேந்திர சிங். இவரிடம் ஹத்ராஸ் பாலியல் பலாத்காரம் தொடர்பாக செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு சுரேந்திர சிங் பதிலளிக்கையில், நல்ல மதிப்புகளால் மட்டுமே இது போன்ற சம்பவங்களை நிறுத்தலாம், நிர்வாகம் அல்லது வாளால் இது போன்ற சம்பவங்களை நிறுத்த முடியாது.

கண்ணியமாக நடந்து கொள்ள மகள்களுக்கு பெற்றோர்கள் கற்பித்தால் பாலியல் பலாத்காரங்களை நிறுத்தலாம்.. பா.ஜ.க. எம்.எல்.ஏ.
ஹத்ராஸில் பாதுகாப்பு பணியில் போலீசார்

கலாச்சார சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி தங்களது இளம் மகள்களை வளர்ப்பதும், கண்ணியமாக நடந்து கொள்ள அவர்களுக்கு கற்பிப்பதும் அனைத்து பெற்றோர்களின் தர்மம். பாதுகாப்பு கொடுப்பது அரசின் தர்மம் என்றால், குழந்தைகளுக்கு நற்பண்புகளை கற்பிப்பது குடும்பத்தின் தர்மம். அரசாங்கமும் மற்றும் நல்ல ஒழுக்கங்களும் இணைந்து மட்டுமே அழகான நாட்டை உருவாக்க முடியும் என தெரிவித்தார்