தினமும் குடிக்கிறேன்.. பசுவின் சிறுநீர் கொரோனாவுக்கு மட்டுமல்ல இதய நோய்களையும் தடுக்கும்.. பா.ஜ.க. எம்.எல்.ஏ.

 

தினமும் குடிக்கிறேன்.. பசுவின் சிறுநீர் கொரோனாவுக்கு மட்டுமல்ல இதய நோய்களையும் தடுக்கும்.. பா.ஜ.க. எம்.எல்.ஏ.

பசுவின் சிறுநீரை தினமும் குடிக்கிறேன் இது கொரோனாவுக்கு மட்டுமல்ல இதய நோய்களையும் தடுக்கும் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

நம் நாட்டில் கடந்த ஆண்டு கொரோன வைரஸ் பரவல் தொடங்கிய முதல் அதிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள பல சுவாரஸ்யமான வழிகளை முயற்சி பார்க்கின்றனர். மருத்துவ ஆலோசனைகளை பெரும்பாலான மக்கள் கடைபிடித்தாலும், கொரோனா வைரஸ் அண்டாமல் இருக்க சிலர் விநோதமான தீர்வுகளையும் முன்வைக்கின்றனர். குறிப்பாக சிலர் பசுவின் சிறுநீர் மீது அதிக நம்பிக்கை வைக்கின்றனர்.

தினமும் குடிக்கிறேன்.. பசுவின் சிறுநீர் கொரோனாவுக்கு மட்டுமல்ல இதய நோய்களையும் தடுக்கும்.. பா.ஜ.க. எம்.எல்.ஏ.
பசுவின் சிறுநீர்

பசுவின் சிறுநீர் தங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று சாதாரண மக்கள் மட்டுமல்ல, அரசியல்வாதிகள் கூட நம்புகின்றனர் மேலும் அதற்கு உறுதி அளிக்கின்றனர். உதாரணமாக உத்தர பிரதேச பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் தான் பசுவின் சிறுநீரை குடித்து வருவதால் கொரோனா வைரஸ் பாதிக்கப்படாமல் உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். பசுவின் சிறுநீரை எப்படி குடிப்பது என்பது குறித்து அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.

தினமும் குடிக்கிறேன்.. பசுவின் சிறுநீர் கொரோனாவுக்கு மட்டுமல்ல இதய நோய்களையும் தடுக்கும்.. பா.ஜ.க. எம்.எல்.ஏ.
பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேந்திர சிங்

அந்த வீடியோவில் உத்தர பிரதேசததின் பைரியா தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் பேசியுள்ளார். அதில், தினமும் காலையில் பல் துலக்கிய பின் வெறும் வயிற்றில் பசு சிறுநீர் 5 மூடி அளவு குளிர்ந்த நீரில் கலந்து குடிக்கிறேன். நீங்கள் எதுவும சாப்பிடாதபோதுதான் இந்த கலவையை உட்கொள்ள வேண்டும். கோவிட்-19 உடன் போராடுவதற்கு மட்டுமல்ல இதய நோய்களை தடுக்கவும் பசுவின் சிறுநீர் உதவும் என்று தெரிவித்துள்ளார்.