கீழ்பவானி கால்வாய் உடைப்பால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, பாஜக எம்எல்ஏ சரஸ்வதி ஆறுதல்!

 

கீழ்பவானி கால்வாய் உடைப்பால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, பாஜக எம்எல்ஏ சரஸ்வதி ஆறுதல்!

ஈரோடு

பெருந்துறை அருகே கீழ்பவானி கால்வாயில் ஏற்பட்ட உடைப்பினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியவிலாமலை ஊராட்சி, கண்ணவேலம்பாளையம் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் நேற்று முன்தின் கான்கிரீட் தளத்தில் உடைப்பு ஏற்பட்டதால், பாசனத்துக்கு திறக்கப்பட்ட பல ஆயிரம் கனஅடி தண்ணீர் விவசாய நிலங்களிலும், குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்து சேதப்படுத்தியது.

இதன் காரணமாக தண்ணீர் முள்ளம்பட்டி ஊராட்சி வரவங்காடு, கரைக்காடு, மலைப்பாளையம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும், நெல், கரும்பு, மஞ்சள், வாழை பயிரிட்டிருந்த விளை நிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது.

கீழ்பவானி கால்வாய் உடைப்பால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, பாஜக எம்எல்ஏ சரஸ்வதி ஆறுதல்!

இந்த நிலையில், மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதி நேற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண பொருட்களையும் வழங்கினார்.

தொடர்ந்து, கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்ட இடத்தை நேரில்ஆய்வு செய்த எம்எல்ஏ சரஸ்வதி, அதிகாரிகளிடம் பணிகளை துரிதமாகவும், விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் தண்ணீர் திறப்புக்கு ஏதுவாக பணியை முடித்து கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.