ராஜஸ்தான் அரசியலில் அடுத்தடுத்து திருப்பம்… இன்று மாலை 4 மணிக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

ராஜஸ்தான் அரசியலில் அடுத்தடுத்து திருப்பம்…  இன்று மாலை 4 மணிக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

ராஜஸ்தான் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் குஜராத் சென்றுள்ளனர். இந்த சூழ்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராம்லால் சர்மா நேற்று தெரிவித்தார். வரும் வெள்ளிக்கிழமையன்று அம்மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

ராஜஸ்தான் அரசியலில் அடுத்தடுத்து திருப்பம்…  இன்று மாலை 4 மணிக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

ராஜஸ்தான் பா.ஜ.க. தலைவர் சதிஷ் பூனியா கூறுகையில், அசோக் கெலாட்டின் ஏஜெண்டாக ராஜஸ்தான் போலீசார் செயல்படுகின்றனர், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை குறிவைப்பதால் அவர்கள் சுற்றுலாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் பா.ஜ.க. அப்படியே மற்றும் ஒற்றுமையாக உள்ளதால் எப்போது பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றாலும் அங்கு அவர்கள் இருப்பார்கள்,என தெரிவித்தார்.

ராஜஸ்தான் அரசியலில் அடுத்தடுத்து திருப்பம்…  இன்று மாலை 4 மணிக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

சச்சின் பைலட்டும் மற்றும அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டது முதல் ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தினந்தோறும் ஏதாவது அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்களை விலை வாங்க பா.ஜ.க. குதிரை பேரம் நடத்துவதாக முதல்வர் அசோக் கெலாட் முதலில் குற்றம் சாட்டினார். மேலும், தனது ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ஹோட்டலில் தகுந்த பாதுகாப்புடன் தங்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று சச்சின் பைலட் ராகுல் காந்தியை சந்தித்து சமாதானம் ஆகியுள்ளதால் அசோக் கெலாட் அரசு நெருக்கடியிலிருந்து தப்பியது.