நான் ரொம்ப பேசினால் என் மீது தேசவிரோத வழக்கு போடலாம்.. உ.பி. பா.ஜ.க. அரசை விமர்சித்த சொந்த கட்சி எம்.எல்.ஏ.

நான் ரொம்ப பேசினால் என் மீது தேசவிரோத வழக்கு போடலாம்.. உ.பி. பா.ஜ.க. அரசை விமர்சித்த சொந்த கட்சி எம்.எல்.ஏ.

நான் அதிகம் பேசினால் என் மீது கூட தேசவிரோத வழக்கு போடலாம் என்று உத்தர பிரதேச பா.ஜ.க. அரசை சொந்த கட்சி எம்.எல்.ஏ. ஒருவரே விமர்சனம் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் சீதாப்பூரில் அரசு டிரவுமா (விபத்து காய மருத்துவமனை) மைய கட்டிடம் பயன்பாட்டுக்கு தயார் நிலையில் பல ஆண்டுகளாக உள்ளது. ஆனால் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்த சூழ்நிலையில், டிரவுமா மையம் செயல்பாட்டுக்கு கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராகேஷ் ரத்தோரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

நான் ரொம்ப பேசினால் என் மீது தேசவிரோத வழக்கு போடலாம்.. உ.பி. பா.ஜ.க. அரசை விமர்சித்த சொந்த கட்சி எம்.எல்.ஏ.
ராகேஷ் ரத்தோர்

அதற்கு எம்.எல்.ஏ. ராகேஷ் ரத்தோர் பதிலளிக்கையில், நான் பல நடவடிக்கைகள் எடுத்துள்ளேன். ஆனால் எம்.எல்.ஏ.க்களுக்கு என்ன அந்தஸ்து இருக்கிறது? நான் அதிகம் பேசினால் எனக்கு எதிராக தேசத்துரோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என்று தெரிவித்தார். இதனையடுத்து செய்தியாளர்கள், ஒரு எம்.எல்.ஏ.வாக நீங்கள் உங்களது சொந்த அரசாங்கத்துக்கு பிரதிநிதித்துவம் செய்ய முடியாது என்று சொல்கிறகிறீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.

நான் ரொம்ப பேசினால் என் மீது தேசவிரோத வழக்கு போடலாம்.. உ.பி. பா.ஜ.க. அரசை விமர்சித்த சொந்த கட்சி எம்.எல்.ஏ.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

அதற்கு ராகேஷ் ரத்தோர், எம்.எல்.ஏ.க்கள் தங்களது மனதில் இருப்பதை பேச முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? கடந்த காலங்களில் நான் கேள்விகளை எழுப்பியிருப்பது உங்களுக்கு தெரியும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசை விமர்சனம் செய்தார். ராகேஷ் ரத்தோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது முதல்முறையல்ல.கடந்த ஆண்டு பிரதமர் மோடியை விமர்சனம் செய்து பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. ராகேஷ் ரத்தோர் 2017ம் ஆண்டில் அம்மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க.வில் இணைந்தார். அதற்கு முன் தேர்தல்களில் சுயேட்சையாக போட்டியிட்டார்.