மதுராவில் மசூதி இடிக்கப்பட்டு, கிருஷ்ணர் பிறந்த இடத்தில் ஒரு பிரமாண்டமான கோயில்… பா.ஜ.க. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

மதுராவில் மசூதி இடிக்கப்பட்டு, கிருஷ்ணர் பிறந்த இடத்தில் ஒரு பிரமாண்டமான கோயில்… பா.ஜ.க. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

மதுராவில் உள்ள அனைத்து சிறிய கட்டிடங்கள் (மசூதி) அழிக்கப்பட்டு, கிருஷ்ணரின் பிறந்த இடத்தில் ஒரு பிரமாண்டமான கோயில் கட்டப்படும் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் மதுராவில் பகவான் கிருஷ்ணர் பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்துக்களும் மதுராவை கிருஷ்ணர் பிறந்த இடமாக நம்புகின்றனர். இந்நகரத்தில் பழமை வாய்ந்த காத்ரா கேசவ் தோ் கோயிலுக்கு சொந்தமான 13.37 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியில், ஷாஹி இட்கா மசூதி உள்ளது. அந்த மசூதியை அகற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

மதுராவில் மசூதி இடிக்கப்பட்டு, கிருஷ்ணர் பிறந்த இடத்தில் ஒரு பிரமாண்டமான கோயில்… பா.ஜ.க. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு
பகவான் கிருஷ்ணர்

இந்நிலையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் மதுராவில் சிறிய கட்டிடத்தை (மசூதி) இடித்து விட்டு கிருஷ்ணர் கோயில் கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். உ.பி. பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜா சிங் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது: ஒரு அட்டவணை உள்ளது. காசி, மதுரா இன்னும் வரவில்லை. பாபர் மசூதி கட்டிடம் இடிக்கப்பட்டது போல், மதுராவில் சிறிய விஷயங்கள் அழிக்கப்பட்டு, கிருஷ்ணரின் பெரிய கோயில் கட்டப்படும்.

மதுராவில் மசூதி இடிக்கப்பட்டு, கிருஷ்ணர் பிறந்த இடத்தில் ஒரு பிரமாண்டமான கோயில்… பா.ஜ.க. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு
ஷாஹி இட்கா மசூதி

மதுராவில் கிருஷ்ணரின் ஒரு பிரமாண்டமான கோயில் அனைத்து நாட்டு மக்களுக்கும் மற்றும் கிருஷ்ண பக்தர்களுக்கும் ஒரு விருப்பமாகும். யோகி ஆதித்யநாத்தின் தலைமையின்கீழ், மதுராவில் உள்ள அனைத்து சிறிய கட்டமைப்புகளும் அழிக்கப்பட்டு, கிருஷ்ணரின் பிறந்த இடத்தில் ஒரு பிரமாண்டமான கோயில் கட்டப்படும். மேலும் காசியில் சிவ பெருமானுக்கு கோயில் கட்ட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மதுராவில் கிருஷ்ணர் கோயில் கட்ட வேண்டும் என்ற ராஜா சிங்கின் அறிக்கை எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலின்போது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.