கேரளாவில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ…. அதிர்ச்சியில் தாமரை கட்சி…

கேரளாவில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ…. அதிர்ச்சியில் தாமரை கட்சி…

கேரள சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன், வேளாண் சட்டங்களுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்தை பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஆதரித்தது ஆளும் கட்சிக்கு பெரும் வியப்பையும், பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.

கேரளாவில் அம்மாநில சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வு நேற்று நடைபெற்றது. கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று சட்டப்பேரவையில் மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு கேரளாவில் பா.ஜ.க.வுக்கு உள்ள ஒரே ஒரு எம்.எல்.ஏ. ஓ.ராஜகோபால் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மேலும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டார். தங்களது கட்சி எம்.எல்.ஏ. ஒருவரே வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக நடந்து கொண்டது பா.ஜ.க.வுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ…. அதிர்ச்சியில் தாமரை கட்சி…
பினராயி விஜயன்

சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு வெளியே வந்த ஓ.ராஜகோபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை நான் ஆதரிக்கிறேன். விவாதத்தின்போது, வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தில் சில குறிப்புகளை நான் எதிர்த்தேன். ஆனால் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சபை எட்டிய ஒருமனதான கருத்தை நான் எதிர்க்கவில்லை.

கேரளாவில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ…. அதிர்ச்சியில் தாமரை கட்சி…
ஓ.ராஜகோபால்

சட்டப்பேரவையில் வாக்களிப்பதை தவிர்த்து விட்டேன். எனது நிலைப்பாடு கட்சியின் நிலைப்பாடாக இருக்கக்கூடாது. இந்த சமரசங்கள் ஒரு ஜனநாயக அமைப்பின் ஒரு பகுதியாகும். நாங்கள் பிடிவாதமாக இருக்கக்கூடாது. நாங்கள் ஒருமித்த கருத்துடன் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.